இந்தியாவுக்கு எதிராக விளையாடும் இலங்கை அணி அறிவிப்பு
ஒருநாள் தொடர் ஜூலை 18 அன்று தொடங்குகிறது.


இந்தியாவுக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சென்றுள்ள ஷிகர் தவன் தலைமையிலான இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடர் ஜூலை 18 அன்று தொடங்குகிறது.
இந்நிலையில் இந்தியாவுக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடும் தசுன் ஷனகா தலைமையிலான இலங்கை அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக குசால் பெரேரா, இந்தியாவுக்கு எதிரான தொடர்களில் இடம்பெறவில்லை. பயிற்சியின்போது வேகப்பந்துவீச்சாளர் பினுரா ஃபெர்னான்டோவுக்குக் காயம் ஏற்பட்டதால் அவரும் ஒருநாள் தொடரிலிருந்து விலகியுள்ளார். இதனால் இலங்கை அணியின் கேப்டனாக தசுன் ஷனகா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக குசால் பெரேரா சமீபத்தில் நியமிக்கப்பட்டார். 30 வயது குசால் பெரேரா, இலங்கை அணிக்காக 22 டெஸ்டுகள், 107 ஒருநாள், 50 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். வங்கதேசத்தில் அந்நாட்டுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 1-2 எனத் தோல்வியடைந்தது குசால் பெரேரா தலைமையிலான இலங்கை அணி. அதன்பிறகு இங்கிலாந்தில் விளையாடிய ஒருநாள், டி20 தொடர் என இரண்டிலும் குசால் பெரேரா தலைமையிலான இலங்கை அணிக்குத் தோல்வியே கிடைத்தது.
இலங்கை ஒருநாள் மற்றும் டி20 அணி: தசுன் ஷனகா (கேப்டன்), தனஞ்ஜெயா டி சில்வா (துணை கேப்டன்), அவிஷ்கா பெர்னான்டோ, பனுகா, பதும் நிஸ்சங்கா, சரித் அசலங்கா, வனிண்து ஹசரங்கா, அஷென் பண்டாரா, மினோத், லஹிரு உதாரா, ரமேஷ் மெண்டிஸ், சமிகா, துஷ்மந்தா, லக்ஷன் சண்டகன், அகிலா தனஞ்ஜெயா, ஷிரன் பெர்னான்டோ, தனஞ்ஜெயா லக்ஷன், இஷான், பிரவீண், அசிதா பெர்னான்டோ, கசுன் ரஜிதா, லஹிரு குமாரா, இசுரு உதானா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...