திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

கடுமையான வலியில் ஷ்ரேயஸ்: ஐபிஎல் முழுவதிலும் பங்கேற்க மாட்டார் எனத் தகவல்

​இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயஸ் ஐயர் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் 2021 ஐபிஎல் முழுவதிலும் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :24 மார்ச் 2021, 10:22 pm IST


இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷ்ரேயஸ் ஐயர் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் 2021 ஐபிஎல் முழுவதிலும் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் பீல்டிங் செய்தபோது ஷ்ரேயஸ் ஐயருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தொடர்ந்து பீல்டிங் செய்யவில்லை. காயம் காரணமாக மீதமுள்ள 2 ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களிலும் ஐபிஎல் தொடரில் சில போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளவுள்ளதால் ஐபிஎல் தொடர் முழுவதிலும் அவர் பங்கேற்க மாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Story image

இதுபற்றி தகவலறிந்த பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தது:

"இடது தோள்பட்டையில் அவருக்கு கடுமையான வலி உள்ளது. அவருக்கு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால், 4 மாதங்களுக்கு அவரால் கிரிக்கெட் விளையாட முடியாது. ஐபிஎல் தொடரின் தொடக்க போட்டிகள் மட்டுமல்ல, முழுவதுமாக அவர் விளையாட மாட்டார்."

ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். அவர் பங்கேற்காத பட்சத்தில் ரிஷப் பந்த், அஜின்க்யா ரஹானே, ஸ்டீவ் ஸ்மித் அல்லது ரவிச்சந்திரன் அஸ்வின் உள்ளிட்டோரில் யாரேனும் ஒருவரிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.