கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஐபிஎல்: கரோனாவிலிருந்து மீண்ட சஹா, அமித் மிஸ்ரா, பிரசித் கிருஷ்ணா

இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் சஹாவும் பிரசித் கிருஷ்ணாவும் இடம்பெற்றுள்ளார்கள்...

News image

சஹா

Updated On :19 மே 2021, 9:50 am

DIN

கரோனா பாதிப்பிலிருந்து சஹா, அமித் மிஸ்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகிய வீரர்கள் மீண்டுள்ளார்கள்.

கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்பட்டது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. அடுத்ததாக ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வந்தன. 

கரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தும் சில வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து ஐபிஎல் 2021 போட்டி காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. 52 நாள்களுக்கு நடைபெறுவதாக இருந்த ஐபிஎல் போட்டியில் 60 ஆட்டங்கள் இடம்பெற இருந்தன. ஆனால் 24 நாள்களில் 29 ஆட்டங்கள் மட்டுமே நடைபெற்றன.

மே 4 அன்று சஹா, அமித் மிஸ்ரா ஆகியோருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானது. அந்த நாளன்றுதான் ஐபிஎல் போட்டி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மே 8 அன்று பிரசித் கிருஷ்ணா கரோனாவால் பாதிக்கப்பட்டார்.

இம்மூவரும் கரோனா பாதிப்பிலிருந்து தற்போது மீண்டுள்ளார்கள். சஹாவும் மிஸ்ராவும் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளார்கள். பிரசித் கிருஷ்ணாவும் கரோனாவிலிருந்து குணமாகிவிட்டதாக அறியப்படுகிறது.

இங்கிலாந்து செல்லும் இந்திய அணியில் சஹாவும் பிரசித் கிருஷ்ணாவும் இடம்பெற்றுள்ளார்கள். மும்பையில் வசிக்கும் வீரர்கள் தவிர மற்ற வீரர்கள் மும்பையில் இன்று முதல் இரு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். இந்நிலையில் சில நாள்கள் குடும்பத்தினருடன் தங்கிவிட்டு மும்பைக்கு வருவதாக சஹா வைத்த கோரிக்கையை பிசிசிஐ ஏற்றுக்கொண்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.