மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

டி20 உலகக் கோப்பையை வென்று மீண்டும் வரலாறு படைப்போம்: ரோஹித் சர்மா நம்பிக்கை

டி20 உலகக் கோப்பையை வென்று மீண்டும் வரலாறு படைப்போம் என ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

News image
Updated On :29 செப்டம்பர் 2021, 12:25 pm

DIN

டி20 உலகக் கோப்பையை வென்று மீண்டும் வரலாறு படைப்போம் என ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2007 டி20 உலகக் கோப்பை வெற்றியை முன்வைத்து இந்தியத் தொடக்க வீரர் ரோஹித் சர்மா இன்ஸ்டகிராமில் கூறியதாவது:

2007, செப்டம்பர் 24. பில்லியன் ரசிகர்களின் கனவு நிறைவேறிய நாள்.

அவ்வளவாக அனுபவம் இல்லாத, இளம் வீரர்களைக் கொண்ட இந்திய அணி டி20 உலகக் கோப்பையை வெல்லும் என யார் எண்ணியிருக்க முடியும்? அது நடந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதன்பிறகு நாம் பல வரலாறுகளைப் படைத்துவிட்டோம். தடுமாறினோம், இருந்தும் நம் ஆர்வத்தைத் தடை போடவில்லை. ஏனெனில் நாம் வெற்றியடைவோம் என எப்போதும் எண்ணி வந்தோம். 

இந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் நாம் அனைத்து திறமைகளையும் வெளிப்படுத்தி மீண்டும் வரலாறு படைப்போம். நாங்கள் அதற்காக வந்துகொண்டிருக்கிறோம். இதை நிறைவேற்றுவோம். நான் தயார் என்று கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.