மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஆஸி. பயிற்சியாளர் ராஜிநாமா: கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்கு ரிக்கி பாண்டிங் கண்டனம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இன்று சோகமான நாள்.

News image

பாண்டிங்

Updated On :5 பிப்ரவரி 2022, 7:01 am

DIN

ஆஸி. பயிற்சியாளரான ஜஸ்டின் லாங்கர் தனது பதவியை ராஜிநாமா செய்த விவகாரத்தில் கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுக்குத் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்.

ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியை ஜஸ்டின் லாங்கர் ராஜிநாமா செய்துள்ளார்.

சமீபத்தில் டி20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி, சொந்த மண்ணில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை 4-0 என வென்றது. 

2018-ல் தென்னாப்பிரிக்காவில் பந்தைச் சேதப்படுத்திய விவகாரம் காரணமாக ஆஸ்திரேலிய கிரிக்கெட்டில் பெரிய சர்ச்சை ஏற்பட்டது. கடினமான அச்சூழலில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளராக முன்னாள் வீரர் ஜஸ்டின் லாங்கர் நியமிக்கப்பட்டார். 51 வயது லாங்கர் ஆஸ்திரேலிய அணிக்காக 105 டெஸ்டுகள், 8 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். 

சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிரான இரு டெஸ்ட் தொடர்களில் ஆஸ்திரேலிய அணி தோல்வியடைந்தபோதும் சமீபத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையையும் ஆஷஸ் தொடரையும் ஆஸ்திரேலிய அணி வென்றதால் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கரின் ஒப்பந்தம் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறுகிய காலத்துக்கு மட்டும் லாங்கரின் ஒப்பந்தத்தை நீட்டிக்க கிரிக்கெட் ஆஸ்திரேலியா விரும்பியது. இதை ஏற்றுக்கொள்ளாத லாங்கர், தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார். ஜூன் மாதத்துடன் லாங்கரின் பதவிக்காலம் முடிவடைகிறது. தன்னுடைய ஒப்பந்தத்தை நீண்ட காலத்துக்கு நீட்டிக்க லாங்கர் விரும்பினார். ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா இதை ஏற்றுக்கொள்ளவில்லை. இதன் காரணமாக இந்நிலை ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து ஆண்ட்ரூ மெக்டொனால்ட், ஆஸ்திரேலிய அணியின் தற்காலிகப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். 

ஆஸி. பயிற்சியாளர் ராஜிநாமா விவகாரம் குறித்து முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியதாவது:

ஆஸ்திரேலிய கிரிக்கெட்டுக்கு இன்று சோகமான நாள். திரும்பிப் பார்த்தால் கடந்த ஆறு மாத காலமாக எதுவும் சரியாக அமையவில்லை. ஜஸ்டின் லாங்கர், டிம் பெயின் விவகாரங்களை கிரிக்கெட் ஆஸ்திரேலியா கையாண்ட விதம் சங்கடம் அளிக்கும் விதத்தில் உள்ளது. இப்படியொரு நாள் வரும் என்பதால் தான் டெஸ்ட் கேப்டன் கம்மின்ஸ், லாங்கருக்கான தனது ஆதரவை வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அப்படி அவர் ஆதரவு அளித்திருந்தால் லாங்கரைத் தாண்டி கிரிக்கெட் ஆஸ்திரேலியாவால் நகர்ந்திருக்க முடியாது. லாங்கர் என்னுடைய நெருங்கிய நண்பர். இப்படித்தான் நடக்கும் என்பதை முன்பே நான் உணர்ந்திருந்தேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.