மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

2022-ல் இந்தியாவுக்கு இருமுறை சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி

2023-ல் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் இலங்கை அணி டிசம்பரில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து...

News image
இலங்கை அணி
Updated On :1 பிப்ரவரி 2024, 8:03 am

DIN

இலங்கை அணி இந்த வருடம் இந்தியாவுக்கு இருமுறை சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.

இலங்கை அணியின் 2022 கிரிக்கெட் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அணி இந்த வருடம் 8 டெஸ்டுகளில் விளையாடுகிறது. ஜிம்பாப்வே, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகள் இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்கின்றன. ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் ஆசியக் கோப்பை டி20 போட்டி இலங்கையில் நடைபெறவுள்ளது. 

பிப்ரவரி - மார்ச் மாதங்களில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி, 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்கான அட்டவணையை பிசிசிஐ முன்பே வெளியிட்டது.

மேலும் டிசம்பர் 2022 - ஜனவரி 2023 மாதங்களில் இந்தியாவுக்கு மீண்டும் சுற்றுப்பயணம் செய்கிறது இலங்கை அணி. இதன் அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. 2023-ல் ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டி இந்தியாவில் நடைபெறுவதால் இலங்கை அணி டிசம்பரில் இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 அல்லது 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.