உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் சர்ச்சை: பேச அனுமதியில்லை என தேர்வுக்குழுத் தலைவர் பேட்டி

மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்தது பற்றி பேச அனுமதியில்லை எனத் தேர்வுக்குழுத் தலைவர் பேட்டி நீது டேவிட் கூறியுள்ளார்.
மிதாலி ராஜ்
மிதாலி ராஜ்

மகளிர் உலகக் கோப்பைக்கான இந்திய அணியைத் தேர்வு செய்தது பற்றி பேச அனுமதியில்லை எனத் தேர்வுக்குழுத் தலைவர் பேட்டி நீது டேவிட் கூறியுள்ளார்.

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்தில் மார்ச் 4 முதல்  மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. 31 நாள்களுக்கு ஆறு நகரங்களில் 31 ஆட்டங்கள் நடைபெற்றவுள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் என 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 8 அணிகளும் இதர அணிகளுடன் ஒரு முறை மோதும் விதத்தில் லீக் ஆட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஏப்ரல் 3 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மிதாலி ராஜ் தலைமையிலான அணியில் பிரபல வீராங்கனைகளான ஜெமிமா ரோட்ரிகஸ், ஷிகா பாண்டே ஆகிய இருவரும் இடம்பெறவில்லை. மேக்னா சிங், ரேணுகா சிங், யாஷ்திகா பாட்டியா ஆகியோருக்கு இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.

இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 5 ஒருநாள், ஒரு டி20 ஆட்டத்திலும் பங்கேற்கிறது. பிப்ரவரி 9 முதல் 24 வரை இத்தொடர்கள் நடைபெறுகின்றன. 

இந்நிலையில்  ஜெமிமா ரோட்ரிகஸ், ஷிகா பாண்டே ஆகிய இருவரையும் தேர்வு செய்யாததற்குப் பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள். மேலும் தேர்வுக்குழுவினர் அணித் தேர்வு குறித்து விளக்கம் அளிக்காதது ஏன் என்றும் பலரும் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

இந்நிலையில் யு.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு இந்திய மகளிர் அணியின் தேர்வுக்குழுத் தலைவர் பேட்டி நீது டேவிட் அளித்த பேட்டியில் கூறியதாவது:

தற்போது அணித் தேர்வு பற்றி பேச எங்களுக்கு அனுமதியில்லை. இந்திய அணி போட்டிக்குப் புறப்படும் முன்பு தேர்வுக்குழுவினரின் செய்தியாளர் சந்திப்பு இருக்குமா எனக் கேட்கிறீர்கள். அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். 

இந்திய அணி

மிதாலி ராஜ் (கேப்டன்), ஹர்மன்ப்ரீத் கெளர் (துணை கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, யாஷ்திகா பாட்டியா, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஸ்நேக் ராணா, ஜுலான் கோஸ்வாமி, பூஜா வஸ்த்ரகர், மேக்னா சிங், ரேணுகா சிங், தானியா பாட்டியா (விக்கெட் கீப்பர்), ராஜேஷ்வரி கயாக்வாட், பூணம் யாதவ்.

மாற்று வீராங்கனைகள்: சபினேனி மேக்னா, ஏக்தா பிஸ்த், சிம்ரன் தில் பகதூர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com