கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

நியூசிலாந்து ஆல்ரவுண்டர் மிட்செல் சான்ட்னருக்கு கரோனா

நியூசிலாந்து கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர் மற்றும் டி20 கேப்டன் மிட்செல் சான்ட்னருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :3 ஜூலை 2022, 7:26 am

DIN

நியூசிலாந்து கிரிக்கெட்டின் ஆல்ரவுண்டர் மற்றும் டி20 கேப்டன் மிட்செல் சான்ட்னருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

அயர்லாந்து தொடருக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து சுற்றுப்பயணம் உள்ள நிலையில் ஆல்ரவுண்டர் மிட்செல் சான்ட்னருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. 

நியூசிலாந்து ஒருநாள் அணி: டாம் லாதன் (கேப்டன்), பின் ஆலன், மைக்கெல் பிரேஸ்வல், டேன் கிளவர், ஜாகோப் டஃபி, லாக்கி பெர்குசன், மார்டின் குப்டில், ஆடம் மில்னே, மாட் ஹென்றி, டேரில் மிட்செல், ஹன்றி நிக்கோலஸ், கிளன் பிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னர், இஷ் சௌதி, பிலையர் திக்னர், வில் யங். 

நியூசிலாந்து டி20 அணி: மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), பின் ஆலன், மைக்கெல் பிரேஸ்வல், மார்க் சேப்மன், டேன் கிளவர், லாக்கி பெர்குசன், மார்டின் குப்டில், ஜிம்மி நீஷம், கிளென் பிலிப்ஸ், மைக்கெல் ரிப்பன், பென் சீர்ஸ், இஷ் சௌதி, பிலையர் திக்னர். 

நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் ஷேன் ஜூர்கென்சன் கூறியதாவது: 

கோவிட் வருங்காலத்திலும் கடினமான சூழ்நிலையை உருவாக்கும். அதற்கேற்றார் போல நாம் தான் மாறிக்கொள்ள வேண்டும். அவர் நலமுடன் இருக்கிறார். விரைவில் எங்களுடன் இணைவார் என நம்புகிறேன். நாங்கள் அயர்லாந்து, மே.இ. தீவுகள் அணிகளுடன் சேர்த்து மொத்தம் 11 போட்டிகளில் விளையாட இருக்கிறோம். அதனால் மிட்டெசலை அவசரப்படுத்தப் போவதில்லை. அவர் குணமானதும் அணிக்கு திரும்புவார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.