
இந்திய அணி அடுத்த மாதம் ஜிம்பாப்வேவுக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது.
இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இதன்பிறகு இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. இந்தச் சுற்றுப்பயணம் ஆகஸ்ட் 7 அன்று முடிவடைகிறது.
இந்நிலையில் இந்திய அணியின் அடுத்தச் சுற்றுப்பயணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்ட் 27 முதல் இலங்கையில் நடைபெறும் ஆசியக் கோப்பைப் போட்டிக்கு முன்பாக ஜிம்பாப்வேவுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவுள்ளது.
ஜிம்பாப்வே கிரிக்கெட் சங்கம் தரப்பிலிருந்து தெரிவித்த தகவலின்படி இந்திய அணி, ஜிம்பாப்வேயில் ஆகஸ்ட் 18, ஆகஸ்ட் 20, ஆகஸ்ட் 22 ஆகிய தேதிகளில் மூன்று ஒருநாள் ஆட்டங்களையும் விளையாடவுள்ளது.
இந்தத் தொடரில் பல இந்திய இளம் வீரர்கள் பங்கேற்பார்கள், விவிஎஸ் லக்ஷ்மண் அணியின் பயிற்சியாளராக இருப்பார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.