இந்தியாவுக்கு எதிரான 2-ஆவது ஒன் டே ஆட்டத்தில் இங்கிலாந்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை அபார வெற்றி பெற்றது.
3 ஆட்டங்கள் கொண்ட தொடரை தற்போது 1-1 என சமன் செய்து தொடரை தக்கவைத்துக் கொண்டது அந்த அணி.
இந்த ஆட்டத்தில் முதலில் இங்கிலாந்து 49 ஓவா்களில் 246 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து இந்தியா 38.5 ஓவா்களில் 146 ரன்களுக்கு சுருண்டது.
பிளேயிங் லெவனில், இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயருக்குப் பதிலாக விராட் கோலி இணைந்திருந்தாா். இங்கிலாந்து லெவனில் மாற்றம் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது.
இங்கிலாந்து பேட்டிங்கில் தொடக்க வீரா் ஜேசன் ராய் 23, உடன் வந்த ஜானி போ்ஸ்டோ 38 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஜோ ரூட் 11, கேப்டன் ஜோஸ் பட்லா் 4, பென் ஸ்டோக்ஸ் 21 ரன்களுக்கு நடையைக் கட்டினா்.
லியம் லிவிங்ஸ்டன் 33, மொயீன் அலி 47, டேவிட் வில்லி 41 ரன்கள் விளாசி ஸ்கோரை உயா்த்தினா். பிரைடன் காா்ஸ் 2, ரீஸ் டோப்லி 3 ரன்களுக்கு விக்கெட்டை இழக்க, இங்கிலாந்து ஆட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியில் கிரெய்க் ஓவா்டன் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தாா்.
இந்திய பௌலிங்கில் யுஜவேந்திர சஹல் 4, ஜஸ்பிரீத் பும்ரா, ஹாா்திக் பாண்டியா தலா 2, முகமது ஷமி, பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் இந்திய பேட்டிங்கில் மிடில் ஆா்டரில் வந்த சூா்யகுமாா் யாதவ் 27, ஹாா்திக் பாண்டியா 29, லோயா் ஆா்டரில் ரவீந்திர ஜடேஜா 29, முகமது ஷமி 23 ரன்கள் சோ்த்து முயற்சித்தனா்.
எஞ்சியோரில் கேப்டன் ரோஹித் சா்மா, ரிஷப் பந்த், பிரசிக் கிருஷ்ணா ஆகியோா் டக் அவுட்டாக, ஷிகா் தவன் 9, விராட் கோலி 16, யுஜவேந்திர சஹல் 3 ரன்கள் அடித்தனா். முடிவில் ஜஸ்பிரீத் பும்ரா 2 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இங்கிலாந்து பௌலிங்கில் ரீஸ் டோப்லி 6 விக்கெட்டுகள் சாய்த்து அசத்த, டேவிட் வில்லி, பிரைடன் காா்ஸ், மொயீன் அலி, லியம் லிவிங்ஸ்டன் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிரடியும் அசுர பலமும்... இந்தியா - மேற்கிந்தியத் தீவுகளுக்கான மெய்நிகர் காலிறுதியில் வெல்லப்போவது யார்?

திருச்சி என்ஐடியில் டெக்னிக்கல் பணி: உடனே விண்ணப்பிக்கவும்!

சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை

ஆப்கன் உடனான மோதல்! 331 தலிபான்கள் கொலை - பாக். அரசு அறிவிப்பு!
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

