இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கோலியின் தலைமையில் நான் விளையாடியிருந்தால்...: ஸ்ரீசாந்த்

2011-ல் சச்சினுக்காக உலகக் கோப்பையை வென்றோம் என்றார்.     

News image
Updated On :19 ஜூலை 2022, 9:28 am

DIN

விராட் கோலியின் தலைமையில் நான் விளையாடியிருந்தால் இந்திய அணி மூன்று உலகக் கோப்பைகளை வென்றிருக்கும் என முன்னாள் வீரர் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் வேகப்பந்து வீச்சாளரான ஸ்ரீசாந்த். இந்திய அணிக்காக 27 டெஸ்டுகள், 53 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 169 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 

ஒரு பேட்டியில் விராட் கோலி பற்றி ஸ்ரீசாந்த் கூறியதாவது:

2011க்குப் பிறகு நாம் உலகக் கோப்பையை வெல்லவில்லை. விராட் கோலியின் தலைமையில் நான் விளையாடியிருந்தால் இந்திய அணி 2015, 2019 & 2021 என மூன்று உலகக் கோப்பைகளை வென்றிருக்கும். 2011-ல் சச்சினுக்காக உலகக் கோப்பையை வென்றோம் என்றார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.