பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை தொடங்கியது: சதமடித்த மே.இ. தீவுகள் வீராங்கனை

தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸ் 128 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்து அசத்தினார். 

News image
Updated On :4 மார்ச் 2022, 6:04 am

DIN

நியூசிலாந்தில் இன்று முதல் மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பைப் போட்டி நடைபெறுகிறது. 31 நாள்களுக்கு ஆறு நகரங்களில் 31 ஆட்டங்கள் நடைபெற்றவுள்ளன. நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள் என 8 அணிகள் இப்போட்டியில் பங்கேற்கின்றன. 8 அணிகளும் இதர அணிகளுடன் ஒரு முறை மோதும் விதத்தில் லீக் ஆட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. புள்ளிகள் பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெறும். ஏப்ரல் 3 அன்று இறுதிச்சுற்று ஆட்டம் நடைபெறவுள்ளது.

இன்று முதல் தொடங்கியுள்ள மகளிர் உலகக் கோப்பைப் போட்டியில் நியூசிலாந்தும் மேற்கிந்தியத் தீவுகளும் மோதுகின்றன. முதல் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. மே.இ. தீவுகள் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 259 ரன்கள் எடுத்தது. தொடக்க வீராங்கனை ஹேலி மேத்யூஸ் 128 பந்துகளில் 1 சிக்ஸர், 16 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்து அசத்தினார். 

நியூசிலாந்து அணி 13 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 56 ரன்கள் எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.