2022 கால்பந்து போட்டி கத்தாரில் நவம்பர் 20 முதல் டிசம்பர் 18 வரை நடைபெறுகிறது. லீக் சுற்றில் 12 நாள்களுக்குத் தினமும் நான்கு ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிந்து களமிறங்குகின்றன. குரூப் எச் பிரிவில் கானா , தொன் கொரியா அணிகள் மோதியது.
முதல் பாதி ஆட்டத்தில் கானா அணி 2 கோல்களை அடித்தது. தென் கொரியா அணி ஒரு கோல் கூட அடிக்கவில்லை. பின்னர் 58வது, 61 வது நிமிடங்களில் தொடர்ந்து ஒரு கோலடித்து அசத்தியது தென் கொரிய அணி.
68வது நிமிடத்தில் கானாவை சேர்ந்த வீரர் மொஹமது குடுஸ் 3வது கோலை அடித்து அசத்தினார். கடைசி வரை போராடியும் தென் கொரியா அணியினால் அடுத்த கோலை அடிக்க முடியவில்லை.
3-2 என கானா அணி வெற்றி பெற்றது. உலகக் கோப்பை போட்டி வரலாற்றில் ஒரே போட்டியில் 3 கோல்களை அடிப்பது கானா அணிக்கு இதுவேமுதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
‘க்வாட்’ கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சா்கள் கூட்டம்: சீனா எதிர்வினை!

பெரும் கவலையளிக்கிறது! தொண்டர்களுக்கு திருமா வேண்டுகோள்! | VCK

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



