திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பாகிஸ்தான் மக்களுக்கு உதவும் பென் ஸ்டோக்ஸ்!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. 

News image

கோப்புப் படம்

Updated On :28 நவம்பர் 2022, 7:48 pm IST

17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து அணி பாகிஸ்தான் சென்றுள்ளது. 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக கடந்த 2005ஆம் ஆண்டு பாகிஸ்தான் மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாடியது. அதன்பின் தற்போது 17 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தானுடன் அதன் சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து வீரர்கள் நவம்பர் 27 அன்று இஸ்லமாபாத் வந்தடைந்தனர்.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி டிசம்பர் 1 ஆம் தேதி ராவல்பிண்டியில் தொடங்குகிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 9, 17 ஆம் தேதிகளில் முறையே முல்தானிலும், கடைசி டெஸ்ட் போட்டி கராச்சியிலும் நடைபெற உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது: 

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தொடருக்காக முதல்முறையாக பாகிஸ்தானில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியாக மீண்டும் இங்கு வருவது மிகவும் உற்சாகமாக உள்ளது.  விளையாடும் மற்றும் ஆதரவு குழு மத்தியில் ஒரு பொறுப்பு உணர்வு உள்ளது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் பாகிஸ்தானை மிகவும் பாதித்த வெள்ளம் பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது. இது பாகிஸ்தான் நாடு மற்றும் மக்கள் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.

எனது வாழ்க்கையில் விளையாட்டு எனக்கு நிறைய கொடுத்துள்ளது. கிரிக்கெட்டை தாண்டி திரும்பக் கொடுப்பது மட்டுமே சரியானது என்று நினைக்கிறேன். இந்த டெஸ்ட் தொடரில் இருந்து எனது போட்டிக்கான கட்டணத்தை பாகிஸ்தான் வெள்ள பாதிப்புக்கு வழங்குகிறேன். இந்த நன்கொடை பாகிஸ்தானில் வெள்ளத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் கட்டியெழுப்ப உதவும் என நம்புகிறேன். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.