டி20 உலகக் கோப்பை: முதல் போட்டி தொடங்கியது; இலங்கை பந்து வீச்சு! 

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சௌத் கீலாங்ஸ் மைதானத்தில் தொடங்கியது.
டி20 உலகக் கோப்பை: முதல் போட்டி தொடங்கியது; இலங்கை பந்து வீச்சு! 

ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் சௌத் கீலாங்ஸ் மைதானத்தில் தொடங்கியது.  குரூப் ஏ பிரிவு முதல் ஆட்டத்தில் இலங்கை - நமீபிய அணிகள் மோதுகின்றன.

கிரிக்கெட்டில் குறுகிய காலத்தில் அதிக வரவேற்பைப் பெற்ற ஆட்டமுறையாக டி20 உள்ளது. கடந்த 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட முதல் டி20 உலகக் கோப்பையில் இந்தியா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. கடந்த 2021-இல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் ஆனது ஆஸி. 

நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. 4 ஓவர்களுக்கு நபீயா அணி 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

சமீரா ஓவரில் மைக்கேல் 3 ரன்னில் ஆட்டமிழந்தார். மதுஷன் ஓவரில் திவான் காக் 9 ரன்னிலும் ஆட்டமிழ்ந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com