கடைசி ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்தை வீழ்த்திய இந்திய மகளிர் அணி (ஹைலைட்ஸ் விடியோ)

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 
சிறப்பாக விளையாடிய மந்தனா
சிறப்பாக விளையாடிய மந்தனா

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் ஆட்டத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 

நியூசிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்து ஒரு டி20, 5 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளது இந்திய மகளிர் அணி. டி20 ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது. முதல் ஒருநாள் ஆட்டத்தை 62 ரன்கள் வித்தியாசத்திலும் 3 விக்கெட் வித்தியாசத்தில் 2-வது ஒருநாள் ஆட்டத்தையும் வென்றது நியூசிலாந்து அணி. 3-வது ஒருநாள் ஆட்டத்தை மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. 20 ஓவர்களாகக் குறைக்கப்பட்ட 4-வது ஒருநாள் ஆட்டத்திலும் 63 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியடைந்தது.

இந்நிலையில் 5-வது ஒருநாள் ஆட்டம் குயின்ஸ்டவுனில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

இந்திய அணி சிறப்பாகப் பந்துவீசியதால் நியூசிலாந்து அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 251 ரன்களே எடுக்க முடிந்தது. 21 வயது அமீலியா கெர் மீண்டும் அரை சதமெடுத்து 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.  இந்திய அணியில் ராஜேஸ்வரி, தீப்தி சர்மா, ஸ்னேக் ராணா ஆகிய மூவரும் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

இந்திய அணி இலக்கை நன்கு விரட்டி 46 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்து ஆறுதல் வெற்றியை அடைந்தது. ஸ்மிருதி மந்தனா 71, ஹர்மன்ப்ரீத் கெளர் 63, கேப்டன் மிதாலி ராஜ் ஆட்டமிழக்காமல் 54 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார்கள். ஆட்டத்தின் சிறந்த வீராங்கனையாக மந்தனாவும் தொடரின் சிறந்த வீராங்கனையாக அமீலியா கெர்ரும் தேர்வானார்கள்.

நியூசிலாந்து அணி 4-1 என ஒருநாள் தொடரை வென்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com