டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

தாமதமாக டிக்ளேர் செய்தது ஏன்?: டிரா முடிவு பற்றி ஆஸி. கேப்டன் பதில்

ஆஸ்திரேலிய அணியின் 2-வது இன்னிங்ஸில் தாமதமாக டிக்ளேர் செய்தது பற்றி ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ் பதில் அளித்துள்ளார்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 1:35 pm IST

ஆஸ்திரேலிய அணியின் 2-வது இன்னிங்ஸில் தாமதமாக டிக்ளேர் செய்தது பற்றி ஆஸி. கேப்டன் பேட் கம்மின்ஸ் பதில் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 ஆட்டங்களைக் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ஆஷஸ் தொடர், இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்று 3-0 என்கிற முன்னிலையுடன் ஆஷஸ் தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலிய அணி. 

4-வது டெஸ்ட் சிட்னியில் புதன் அன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸி. அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 134 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 416 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. கவாஜா 137, ஸ்மித் 67 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 79.1 ஓவர்களில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஜானி பேர்ஸ்டோ 113 ரன்களும் ஸ்டோக்ஸ் 66 ரன்களும் எடுத்தார்கள். ஸ்காட் போலண்ட் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.

ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 68.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்ஸில் சதமடித்த உஸ்மான் கவாஜா 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கேம்ரூன் கிரீன் 74 ரன்கள் எடுத்தார். 2019 ஆஷஸ் தொடருக்குப் பிறகு ஆஸி. அணியில் மீண்டும் இடம்பிடித்த 35 வயது கவாஜா, தன்னுடைய 45-வது டெஸ்டில் 9-வது மற்றும் 10-வது சதங்களை எடுத்துள்ளார். ஆஷஸ் தொடரில் நான்கு வருடங்களுக்குப் பிறகு சதமடித்துள்ளார். ஒன்றல்ல, இரண்டு.  டிராவிஸ் ஹெட்டுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் ஆஸி. அணியில் இடம்பிடித்த கவாஜா, இந்தச் சதங்களால் தனக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கவேண்டிய நெருக்கடியை உருவாக்கியுள்ளார்.

சிட்னி டெஸ்டில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 388 ரன்கள் இலக்கு அளிக்கப்பட்டது. 5-ம் நாளில் இங்கிலாந்து அணி 102 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 270 ரன்கள் எடுத்து ஆட்டத்தைப் பரபரப்பான முறையில் டிரா செய்தது. ஸாக் கிராவ்லி 77 ரன்களும் பென் ஸ்டோக்ஸ் 60 ரன்களும் எடுத்தார்கள். 

இந்நிலையில் 4-ம் நாளன்று 68.5 ஓவர்கள் விளையாடி நேரத்தை வீணடித்துத் தாமதமாக டிக்ளேர் செய்ததால் ஆஸி. அணியால் வெற்றி பெற முடியவில்லை என்கிற விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு ஆஸி. கேப்டன் கம்மின்ஸ் பதில் அளித்ததாவது:

ஒரு ஓவருக்கு மூன்றரை ரன்கள் எடுக்கவேண்டிய நிலையை நான் எதிர்பார்த்தேன். ஆடுகளமும் மோசமாக இல்லை. அவர்கள் நன்றாக விளையாடினால் 350 ரன்களை எடுத்து விட முடியும். 110 ஓவர்கள் போதுமானதாக நான் கருதினேன் என்றார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.