புதிய பிசிசிஐ தலைவருக்கு முன்னாள் தலைவர் கங்குலி கூறியது என்ன?
By DIN | Published On : 18th October 2022 04:43 PM | Last Updated : 18th October 2022 04:43 PM | அ+அ அ- |

2019 அக்டோபரில் பிசிசிஐ தலைவராக முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலியும் செயலாளராக ஜெய் ஷாவும் தேர்வானார்கள். சமீபத்தில் பிசிசிஐ விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ள பிசிசிஐக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி கங்குலி, ஜெய் ஷா ஆகிய இருவரும் தங்களுடைய பதவிகளில் மேலும் மூன்று வருட காலம் பணியாற்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது. எனினும் பிசிசிஐயின் தலைமைப் பொறுப்புகளில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இதையும் படிக்க: கங்குலியை ஐசிசி தேர்தலில் பங்குபெற பிரதமர் அனுமதிக்க வேண்டும்: மம்தா பானர்ஜி
கடந்த 1983-ல் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியைச் சோ்ந்த ரோஜா் பின்னி (67), பிசிசிஐ தலைவா் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்தார். இந்நிலையில் மும்பையில் நடைபெற்ற பிசிசிஐ ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவராக போட்டியின்றித் தோ்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி கூறியதாவது:
ரோஜா் பின்னிக்கு வாழ்த்துகள். பிசிசிஐ சரியான கைகளில் பொறுப்பை ஒப்படைத்துள்ளது. புதிய குழு மேலும் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்திய கிரிக்கெட் வலுவாக உள்ளது. அவர்கள் எல்லோருக்கும் எனது வாழ்த்துகள்.