பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

டி20 உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு, பிரபல வீரர் நீக்கம்!

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :2 செப்டம்பர் 2022, 9:54 am

டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. பிரதான சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன.

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை, பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடர் ஆகியவற்றுக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபகாலமாக சுமாராக விளையாடி வரும் ஜேசன் ராய், இங்கிலாந்து டி20 அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த வருடம் ஸ்டோக்ஸ், வுட், வோக்ஸ் ஆகிய மூவரும் ஒரு டி20 ஆட்டத்திலும் விளையாடாமல் போனாலும் அவர்கள் மீது நம்பிக்கை வைத்து உலகக் கோப்பைக்குத் தேர்வு செய்துள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். 

அக்டோபர் 22 அன்று பெர்த் மைதானத்தில் தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது இங்கிலாந்து அணி. 17 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இங்கிலாந்து அணி 7 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. டி20 தொடர் செப்டம்பர் 20-ல் தொடங்கி அக்டோபர் 2-ல் முடிவடைகிறது. முதல் நான்கு ஆட்டங்கள் கராச்சியிலும் கடைசி மூன்று ஆட்டங்கள் லாகூரிலும் நடைபெறவுள்ளன. இந்தத் தொடரை முடித்துவிட்டு டி20 உலகக் கோப்பையில் விளையாட ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறது இங்கிலாந்து அணி. டிசம்பரில் பாகிஸ்தானில் 3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இங்கிலாந்து விளையாடவுள்ளது.      

உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணி

ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஜானி பேர்ஸ்டோ, ஹாரி புரூக், சாம் கரண், கிறிஸ் ஜார்டன், லியம் லிவிங்ஸ்டன், டேவிட் மலான், அடில் ரஷித், பில் சால்ட், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

மாற்று வீரர்கள்: லியம் டாசன், ரிச்சர்ட் கிளீசன், டைமல் மில்ஸ்

பாகிஸ்தான் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி

ஜாஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஹாரி புரூக், ஜார்டன் காக்ஸ், சாம் கரண், பென் டக்கட், லியம் டாசன், ரிச்சர்ட் கிளீசன், டாம் ஹெல்ம், வில் ஜேக்ஸ், டேவிட் மலான், அடில் ரஷித், பில் சால்ட், ஆலி ஸ்டோன், ரீஸ் டாப்லி, டேவிட் வில்லி, கிறிஸ் வோக்ஸ், லூக் வுட், மார்க் வுட். 
 

Related Article

டி20 போட்டி: சச்சின் தலைமையிலான அணி அறிவிப்பு

லெஜண்ட்ஸ் லீக்: கேப்டன்களாக சேவாக், கம்பீர், ஹர்பஜன் சிங், இர்பான் பதான் தேர்வு

நோ பால் வீசிய சுழற்பந்து வீச்சாளர்: வங்கதேச கேப்டன் அதிருப்தி

துபை ஓபன் செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி, அர்ஜுன் முன்னிலை!

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு, அதிரடி வீரருக்கு வாய்ப்பு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.