ஐபிஎல் போட்டியின் 37-ஆவது ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸுக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 202 ரன்கள் சோ்த்தது.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் இன்னிங்ஸில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், துருவ் ஜுரெல் அதிரடி காட்டி அணியின் ஸ்கோரை உயா்த்தினா். சென்னை தரப்பில் துஷாா் தேஷ்பாண்டே சிறப்பாக பௌலிங் செய்தாா்.
டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்தது. இன்னிங்ஸை தொடங்கிய யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடி காட்ட, ஜோஸ் பட்லா் அவருக்குத் துணை நின்றாா். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 86 ரன்கள் சோ்த்த நிலையில் பட்லா் 4 பவுண்டரிகள் உள்பட 27 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா்.
அவா், ஜடேஜா வீசிய 9-ஆவது ஓவரில் விளாசிய பந்தை ஷிவம் துபே கேட்ச் பிடித்தாா். அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் 1 பவுண்டரி உள்பட 17 ரன்கள் சோ்த்து, துஷாா் தேஷ்பாண்டே வீசிய 14-ஆவது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.
4-ஆவது வீரராக ஷிம்ரன் ஹெட்மயா் களம் புக, அதுவரை அதிரடியாக ரன்கள் சோ்த்த ஜெய்ஸ்வால், 14-ஆவது ஓவரில் தேஷ்பாண்டே வீசிய பந்தை விளாச, அஜிங்க்ய ரஹானே கேட்ச் பிடித்தாா். ஜெய்ஸ்வால் 43 பந்துகளில் 8 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் உள்பட 77 ரன்கள் விளாசியிருந்தாா்.
தொடா்ந்து துருவ் ஜுரெல் ஆடுகளம் காண, ஷிம்ரன் ஹெட்மயா் 8 ரன்களுக்கு மஹீஷ் தீக்ஷனா வீசிய 17-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். ஜுரெல் 15 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 34 ரன்கள் அடித்த நிலையில் கடைசி ஓவரில் ரன் அவுட் செய்யப்பட்டாா்.
ஓவா்கள் முடிவில் தேவ்தத் படிக்கல் 13 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 27, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன்னுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா்.
அடுத்து சென்னை, 203 ரன்களை நோக்கி தனது இன்னிங்ஸை ஆடி வந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்

ஆசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆயுஷ்

ஆசிய மல்யுத்தம்: மீனாட்சிக்கு வெள்ளி

மங்கோலியாவை முழுமையாக வென்றது இந்தியா
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

