ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த அஸ்வின்! 

பிரபல இந்திய சுழல் பந்து வீச்சாளர் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார். 
ஹர்பஜன் சிங் சாதனையை முறியடித்த அஸ்வின்! 

தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் இந்திய அணிக்காக 92 டெஸ்ட் போட்டியில் விளையாடி டெஸ்டில் 486 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஐசிசி டெஸ்ட் பௌலர் தரவரிசையில் முதலிடத்திலும் ஆல்ரவுண்டர் பட்டியலில் 2வது இடத்திலும் இருக்கிறார். 

இந்திய அணி தற்போது மே.இ.தீவுகள் சுற்றுப்பயணம் செய்து முதல் டெஸ்ட் போட்டியில் 141 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியை இந்தியா பெற்று அசத்தியுள்ளது. 

முதல் இன்னிங்ஸில் 5, இரண்டாவது இன்னிங்ஸில் 7 என மொத்தம் 12 விக்கெட்டுகளை அஸ்வின் அசத்தினார். 

இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 486 விக்கெட்டுகளும் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் இணைந்து மொத்தமாக 709 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதன்மூலமாக சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவிற்காக அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் ஹர்பஜன் சிங்கினை (707) பின்னுக்குத் தள்ளி 2ஆம் இடம் பிடித்துள்ளார் அஸ்வின். அனில் கும்ப்ளே 953 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.  

மேலும் அதிக முறை 5 விக்கெட்டுகள் (34 முறை) பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதில் 67 முறை 5 விக்கெட்டுகளை எடுத்து முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com