கடைசி டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பேட்டிங் தேர்வு!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.
கடைசி டெஸ்ட்: இந்தியாவுக்கு எதிராக ஆஸி. பேட்டிங் தேர்வு!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் பார்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடரின் கடைசி ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலிய அணி எந்த மாற்றமும் இன்றி களமிறங்கியுள்ளது. இந்திய அணி தரப்பில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முகமது சிராஜுக்கு பதிலாக ஷமி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியை காண இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆஸ்தியேலிய பிரதமர் அந்தோணி அல்பனிஸ் ஆகியோர் மைதானத்துக்கு வருகை தந்துள்ளனர்.

மேலும், பார்டா் - காவஸ்கா் டெஸ்ட் தொடரில் 2-1 என முன்னிலையில் இருக்கும் இந்தியா, இந்த ஆட்டத்திலும் வெல்ல வேண்டிய நிலையில் கட்டாயத்தில் இருக்கிறது. பாா்டா் - காவஸ்கா் கோப்பையை தக்க வைப்பதற்கு இந்த ஆட்டத்தை இந்தியா டிரா செய்தாலே போதுமானது.

ஆனால், இதில் வென்று 3-1 என தொடரைக் கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி ஆட்டத்தில் இந்தியாவுக்கு நேரடியாகவே இடம் கிடைக்கும். வெற்றியைத் தவறவிட்டால், இலங்கை - நியூஸிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் முடிவின் அடிப்படையில் இந்தியாவுக்கான முடிவு தெரியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com