பௌர்ணமி கிரிவலம்: விழுப்புரம் - திருவண்ணாமலைக்கு செப். 26-இல் சிறப்பு ரயில்!முதல்வருக்குத் தெரியாமல் அரசாணையா?தவெக அரசுக்கு பெ. சண்முகம் சரமாரிக் கேள்விமதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்! தவெக வேட்பாளர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்களா?காலை உணவு திட்ட விரிவாக்கம்! திருவான்மியூரில் நாளை முதல்வர் விஜய் தொடக்கிவைக்கிறார்!பொது வாழ்வில் வந்துவிட்டால் சுய மரியாதையை இழக்க வேண்டுமா? ஸ்மிருதி இராணி கேள்விமகள் புத்தாக்க நிறுவனத்துக்கு நிதி கொடுக்காதது ஏன்? மெலின்டா கேட்ஸ் விளக்கம்தமிழ்நாட்டில் நேற்று ஒரேநாளில் 228 பேருக்கு டெங்கு ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் இந்திய வீரர் ஹிமான்சு தில்லான் வெள்ளி வென்றார்ஆசிய விளையாட்டு: 10 மீ. ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற ஆடவர் அணி!கனடாவில் விமானப் பயிற்சியின்போது 2 இந்திய மாணவர்கள் பலி! முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் விஜய் லண்டன் சென்றதை கிண்டல் செய்வது ஏற்கத்தக்கதல்ல: மரிய வில்சன்கேரளத்தில் கனமழை! - 6 பேர் பலி; இன்று மஞ்சள் எச்சரிக்கை!

முதல் டி20: சதம் விளாசிய ஜோஷ் இங்லிஷ்; இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்துள்ளது.

Published On :

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்துள்ளது.

உலகக் கோப்பைத் தொடர் முடிவடைந்த ஓரிரு நாட்களுக்குப் பிறகு இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் தொடங்கியுள்ளது. 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் விசாகப்பட்டினத்தில்  இன்று (நவம்பர் 23) நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, ஆஸ்திரேலியா முதலில் பேட் செய்தது. 

அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் களமிறங்கினர். மேத்யூ ஷார்ட் 13 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அதன்பின், ஸ்டீவ் ஸ்மித்துடன் ஜோஷ் இங்லிஷ் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை அபாரமாக விளையாடி ஆஸ்திரேலிய அணிக்கு ரன்களை சேர்த்தது. ஜோஷ் இங்லிஷ் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். அவர் இந்திய பந்துவீச்சாளர்களை தனது அபாரமான ஷாட்களால் திணறடித்தார். அவ்வப்போது பவுண்டரிகளும் சிக்ஸர்களும் பறந்தன. நிதானமாக விளையாடிய ஸ்டீவ் ஸ்மித் அரைசதம் எடுத்தார். அவர் 41 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். அதிரடியாக விளையாடிய ஜோஷ் இங்லிஷ் சதம் விளாசி அசத்தினார். அவர் 50 பந்துகளில் 110 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் அடங்கும். 

இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் குவித்தது. மார்கஸ் ஸ்டொய்னிஸ் 7 ரன்களுடனும், டிம் டேவிட் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் ரவி பிஷ்னோய் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர். 

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.