பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார்: கங்குலி தகவல்

ஐபிஎல் 2023 போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :11 ஜனவரி 2023, 3:56 pm IST

விபத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக ஐபிஎல் 2023 போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார் என முன்னாள் வீரர் கங்குலி தெரிவித்துள்ளார்.

உத்தரகண்ட் மாநிலம், ரூா்கியில் உள்ள தனது தாயைப் பாா்க்க தில்லியில் இருந்து பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த், அதிகாலை காரில் சென்றாா். அம்மாநிலத்தின் மங்லௌா் பகுதியில் சென்று கொண்டிருந்த போது கட்டுப்பாட்டை இழந்த காா் சாலைத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானதில் ரிஷப் பந்த் படுகாயமடைந்தாா். ரூா்கியிலுள்ள மருத்துவமனையில் முதல் கட்ட சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா், உயா் சிகிச்சைக்காக டேராடூனில் உள்ள மேக்ஸ் மருத்துவமனைக்கு அவா் மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு நெற்றிப்பகுதியில் ஏற்பட்ட வெட்டுக்காயத்துக்காக ‘பிளாஸ்டிக் சா்ஜரி’ செய்யப்பட்டது. இந்த விபத்தில் ரிஷப் பந்தின் தலை, முதுகு, காலில் காயங்கள் ஏற்பட்டன. விபத்துக்குள்ளான காா் முழுமையாகத் தீப்பிடித்து உருக்குலைந்தது. 

மேல்சிகிச்சைக்காக ரிஷப் பந்த் மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ செய்துள்ளது. மும்பையில் கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் ரிஷப் பந்த் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மருத்துவமனையில் விளையாட்டு மருத்துவச் சிகிச்சைத் துறையின் தலைவர், மருத்துவர் தின்ஷாவின் மேற்பார்வையில் ரிஷப் பந்துக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கோகிலாபென் மருத்துவமனையில் ரிஷப் பந்துக்குக் கடந்த வாரம் முழங்காலில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது.

இந்நிலையில் ரிஷப் பந்தின் உடல்நிலை பற்றி பிசிசிஐயின் முன்னாள் தலைவரும் இந்திய முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலி கூறியதாவது:

ஐபிஎல் போட்டியில் ரிஷப் பந்த் விளையாட மாட்டார். தில்லி கேபிடல்ஸ் அணியுடன் தொடர்பில் உள்ளேன். ஐபிஎல் போட்டியில் தில்லி அணி நன்றாக விளையாடும். ஆனால் ரிஷப் பந்துக்கு ஏற்பட்ட காயம் தில்லி அணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார்.

தில்லி கேபிடல்ஸ் அணியின் இயக்குநராக செளரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.