நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா கிரிக்கெட் விளையாடுவதற்கு திரும்பியுள்ளார்.
கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைத் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின்போது ஹார்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டது. அதன்பின், அவர் உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகினார். காயம் காரணமாக அவர் ஓய்வெடுத்து வந்தார். இதற்கிடையில், ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக பாண்டியா நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா கிரிக்கெட் விளையாடுவதற்கு திரும்பியுள்ளார்.
டி.ஒய்.பாட்டீல் டி20 கோப்பைத் தொடரில் ரிலையன்ஸ் ஒன் அணிக்காக ஹார்திக் பாண்டியா விளையாடினார். மூன்று ஓவர்கள் வீசிய அவர் 22 ரன்கள் விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
உலகக் கோப்பைக்குப் பிறகு கிரிக்கெட் விளையாடமலிருந்த இஷான் கிஷனும் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்பவுள்ளார். அவர் ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அணிக்காக விளையாடவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆடுகளத்தில் குறையல்ல; பந்துவீச்சில் அசத்திய ஆர்சிபி: க்ருணால் பாண்டியா

திலக் வர்மாவிடம் பேசியது என்ன? ஹார்திக் பாண்டியா விளக்கம்!

தொடர் தோல்வியில் மும்பை! கடினமான முடிவுகளை எடுத்தாக வேண்டும்: ஹார்திக்

நாளை என்பது வரும், சூரியன் உதிக்கும்..! தோல்விக்குப் பின் ஹார்திக் பாண்டியா நம்பிக்கை!
வீடியோக்கள்

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு



