/

3-வது ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு 216 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க மகளிரணி 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது.

News image
- படம் | பிசிசிஐ
Updated On :23 ஜூன் 2024, 12:26 pm

DIN

இந்தியாவுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட் செய்த தென்னாப்பிரிக்க மகளிரணி 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று (ஜூன் 23) பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க மகளிரணி பேட்டிங்கைத் தேர்வு செய்து விளையாடியது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளை இழந்து 215 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் லாரா வோல்வர்ட் அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 57 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 7 பவுண்டரிகள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டாஸ்மின் பிரிட்ஸ் அதிகபட்சமாக 38 ரன்களும், நடைன் டி கிளர்க் 26 ரன்களும் எடுத்தனர். இந்தியா தரப்பில் அருந்ததி ரெட்டி மற்றும் தீப்தி சர்மா தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஷ்ரேயங்கா பாட்டில் மற்றும் பூஜா வஸ்த்ரகார் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.

216 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி இந்திய அணி விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.