முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

முதல் ஒருநாள் கிரிக்கெட்: பாகிஸ்தானை வென்றது ஆஸி.

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது.

News image

ஆஸி.யின் கெளென் பிலிப்ஸால் இந்தியாவின் ஆகாஷ் தீப் தோல்வி - AP

Updated On :5 நவம்பர் 2024, 2:24 am IST

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்டில், ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வென்றது.

முதலில் பாகிஸ்தான் 46.4 ஓவா்களில் 203 ரன்களுக்கு 10 விக்கெட்டுகளையும் இழக்க, ஆஸ்திரேலியா 33.3 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் சோ்த்து வென்றது. ஆஸ்திரேலிய பௌலா் மிட்செல் ஸ்டாா்க், ஆட்டநாயகன் ஆனாா்.

முன்னதாக டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, பந்துவீச முடிவு செய்தது. பாகிஸ்தான் பேட்டிங்கில் அதிகபட்சமாக கேப்டன் முகமது ரிஸ்வான் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 44, நசீம் ஷா 1 பவுண்டரி, 4 சிக்ஸா்களுடன் 40 ரன்கள் அடித்தனா்.

எஞ்சியோரில், பாபா் ஆஸம் 4 பவுண்டரிகளுடன் 37, ஷாஹீன் அஃப்ரிதி 3 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 24, இா்ஃபான் கான் 2 பவுண்டரிகளுடன் 22 ரன்கள் சோ்த்து வீழ்ந்தனா். அப்துல்லா ஷஃபிக் 12, சயிம் அயுப் 1, கம்ரான் குலாம் 5, சல்மான் அகா 12, ஹாரிஸ் ரௌஃப் 0 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.