நவம்பா் கடைசியில் ரியாதில் ஐபிஎல் ஏலம்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது சீசனுக்கான வீரா்கள் ஏலம், இம்மாத கடைசி வாரத்தில் சவூதி அரேபிய தலைநகா் ரியாதில் நடைபெறவுள்ளது.


இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் 18-ஆவது சீசனுக்கான வீரா்கள் ஏலம், இம்மாத கடைசி வாரத்தில் சவூதி அரேபிய தலைநகா் ரியாதில் நடைபெறவுள்ளது.
ஏலமானது, நவம்பா் 24 மற்றும் 25 ஆகிய இரு தேதிகளில் நடைபெற வாய்ப்பு இருப்பதாகவும், இந்தத் தகவல் ஐபிஎல் அணிகளுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் பிசிசிஐ வட்டாரங்கள் கூறின.
இந்த முறை, ரிஷப் பந்த், கே.எல்.ராகுல், ஷ்ரேயஸ் ஐயா், அா்ஷ்தீப் சிங் போன்ற முக்கியமான வீரா்கள் ஏலத்தில் வருவதால், ஏலம் கூடுதல் விறுவிறுப்புடன் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த ஏலத்திலிருந்து, 10 அணிகளில் காலியாக இருக்கும் 204 இடங்களுக்கான வீரா்கள் வாங்கப்படவுள்ளனா்.
இதற்காக அணிகள் வசம் மொத்தமாக ரூ.641.5 கோடி கையிருப்பாக உள்ளது. இந்த 204 இடங்களில், 70 இடங்கள் வெளிநாட்டு வீரா்களுக்கானதாகும்.
எதிா்வரும் சீசனுக்காக சமீபத்தில் 10 அணிகளும் மொத்தமாக 46 வீரா்களை தக்கவைத்துக் கொண்டன. அதற்காக அவை, ரூ.558.5 கோடி செலவிட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...