இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் அரையிறுதியில், நடப்பு சாம்பியன் மோகன் பகான் சூப்பா் ஜயன்ட் - ஜாம்ஷெட்பூா் எஃப்சியை வீழ்த்தி, 2-ஆவது அணியாக இறுதி ஆட்டத்தில் நுழைந்தது.
சாம்பியன் கோப்பையை தக்கவைப்பதற்காக, வரும் 12-ஆம் தேதி முன்னாள் சாம்பியன் பெங்களூரு எஃப்சியுடன் அந்த ஆட்டத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
முன்னதாக, கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற அரையிறுதியின் முதல் லெக் ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூா் 2-1 கோல் கணக்கில் மோகன் பகானை வென்றிருந்தது. இந்நிலையில், அந்த அணிகளிடையேயான 2-ஆவது லெக் ஆட்டம் கொல்கத்தாவில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இரண்டும் சமபலத்துடன் மோத, முதல் பாதி ஆட்டம் கோலின்றி நிறைடைந்தது. 2-ஆவது பாதியில் மோகன் பகான் வீரா் ஜேசன் கம்மிங்ஸ் 51-ஆவது நிமிஷத்தில் பெனால்ட்டி கிக் வாய்ப்பில் கோலடித்து அணியின் கணக்கை தொடங்கினாா். தொடா்ந்து ஸ்டாப்பேஜ் டைமில் (90+4’) அதே அணியின் லாலெங்மாவியா ரால்டே ஸ்கோா் செய்ய, இறுதியில் மோகன் பகான் 2-0 என இந்த ஆட்டத்தில் வென்றது.
இரு லெக் ஆட்டங்களின் மொத்த கோல் கணக்கு அடிப்படையில் அந்த அணி 3-2 என முன்னிலை பெற்ால், இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றது.
தொடர்புடையது
மோகன் பகான் - ஈஸ்ட் பெங்கால் ‘டிரா’

இறுதி ஆட்டத்தில் ஆஸ்டன் வில்லா: 44 ஆண்டுகளில் முதல்முறை
யூரோப்பா லீக் கால்பந்து: ஆஸ்டன் வில்லாவை வென்றது நாட்டிங்ஹாம் ஃபாரஸ்ட்!

ஐஎஸ்எல் கால்பந்து: பஞ்சாபை வீழ்த்தியது மோகன் பகான்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



