கரூர் பலி! அரசுப் பணி வழக்கின் தன்மையை நீர்த்து போக செய்யும்! மார்க்சிய கம்யூ. எ.வ. வேலுவுக்கு எதிரான லுக்-அவுட் நோட்டீஸுக்கு தடை! சென்னை உயர் நீதிமன்றம்அரசுப் பேருந்துகளில் 'மகளிர் விடியல் பயணம்' பெயர் மாற்றம்!பனகல் அரசரின் புகழ் வரலாற்றில் நிலைத்திருக்கும்! முதல்வர் விஜய்தில்லிக்கு ரெட் அலர்ட்! நாட்டில் மழைக்கு 60 பேர் பலி!மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம்: வருத்தம் தெரிவித்து இந்தியா அறிக்கை!தங்கம் விலை தொடர்ந்து 4- வது நாளாக விலை குறைந்தது!வயநாடு நிலச்சரிவில் பலி எண்ணிக்கை 4-ஆக உயர்வுசகோதரரைத் தாக்கிய வழக்கு: அமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராக விலக்கு!முதல்வர் விஜய் நாளை கரூர் பயணம்! 32 பேருக்கு அரசுப் பணி ஆணை!ஓணம் பண்டிகை! 6 சிறப்பு ரயில்களின் முன்பதிவு தொடங்கியது!
/

இறுதிப் போட்டியில் இசை நிகழ்ச்சி: மடோனா, பிடிஎஸ், சஹீரா உடன் இணையும் ஜஸ்டீன் பைபர்!

கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் இடைவேளையில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி குறித்து...

News image

ஃபிஃபா இறுதிப் போட்டியில் இசை நிகழ்ச்சி நிகழ்த்துவோர் புகைப்படங்கள். - படங்கள்: எக்ஸ் / ஃபிஃபா, பிடிஎஸ், மடோனா, சஹீரா, ஜஸ்டின் பைபர்.

Updated On :9 ஜூலை 2026, 3:00 pm IST

கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் ஹாஃப் டைம் இடைவேளையில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சியில் மடோனா, பிடிஎஸ், சஹீரா உடன் பிரபல பாப் பாடகர் ஜஸ்டீன் பைபரும் இணைந்துள்ளார். இதில் புர்னா பாய், ஆண்ட்ரியா போசெல்லி, ஜே பால்வின், கேட்டி பெர்ரி, லிசா, அனிட்டா மற்றும் ரேமா ஆகியோரும் பாடவிருக்கிறார்கள்.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோவில் கடந்த ஜூன் 11ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைப் போட்டிகள் காலிறுதிச் சுற்றுவரை நடைபெற்றுள்ளன. இதில் 8 அணிகள் தேர்வாகியுள்ளன.

இறுதிப் போட்டி அமெரிக்காவில் நியூயார்க், நியூஜெர்ஸி திடலில் ஜூலை 20 இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு நடைபெற இருக்கிறது. முதல் பாதிக்குப் பிறகு விடப்படும் 11 நிமிஷ ஹாஃப்டைம் இடைவேளையில் இசை நிகழ்ச்சி நடத்தப்படவிருக்கிறது.

இந்த இசை நிகழ்ச்சியை கிறிஸ் மார்டின் நடத்துகிறார். இதன்மூலம் கிடைக்கும் நிதி ஃபிஃபாவின் குளோபல் சிட்டிசன் கல்வி அறக்கட்டளைக்குத் தரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கால்பந்தின் மிகப்பெரிய மேடையில் இசையையும் பங்கேற்க செய்து ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சில ரசிகர்கள் போட்டியின் தீவிரமான மனநிலையை சிதைப்பதாக இருக்குமெனவும் சிலர் ஆறுதலாக இருக்குமெனவும் கூறி வருகிறார்கள்.

உலகம் முழுவதும் இருக்கும் குழந்தைகளுக்கு கல்வி, கால்பந்து மீதான உதவிகளுக்கு இந்தத் தொகை பயன்படும் என்பதால் மட்டுமே நடத்தப்படுவதாக ஃபிஃபா கூறியுள்ளது.

காலிறுதியில் ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், ஸ்பெயின், இங்கிலாந்து, மொராக்கோ, பெல்ஜியம், நார்வே, ஸ்விட்சர்லாந்து ஆகிய அணிகள் தேர்வாகியுள்ளன. போட்டியை நடத்தும் நாடுகள் காலிறுதிக்கு தேர்வாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Summary

FIFA World Cup 2026 final halftime show lineup revealed: Justin Bieber, BTS, Madonna, Shakira to perform

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.