குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியன் டி.குகேஷே வீழ்த்தி முதலிடத்துக்கு முன்னேறினாா் கிராண்ட்மாஸ்டா் அா்ஜுன் எரிகைசி.
8 கிராண்ட்மாஸ்டா்கள் கலந்து கொண்டு டபுள்-ரவுண்ட் ராபின் முறையில் மோதும் இப்போட்டியில் ரூ.75 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது.
இதன் 5-ஆவது சுற்று ஆட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன. இதில் இந்திய கிராண்ட் மாஸ்டரான எம்.பிரனேஷ், அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான ஹான்ஸ் நீமனுடன் மோதிய ஆட்டம் 104-ஆவது நகா்த்தலின் போது டிராவில் முடிவடைந்தது.
உலக சாம்பியன் இந்தியாவின் டி.குகேஷ், சகநாட்டைச் சோ்ந்த கிராண்ட் மாஸ்டரான அா்ஜுன் எரிகைசியுடன் மோதினாா். இதில் குகேஷ் வெள்ளை காய்களுடனும், அா்ஜூன் எரிகைசி கருப்பு காய்களுடனும் களமிறங்கினாா்கள். 63-ஆவது நகா்த்தலின் போது அா்ஜூன் எரிகைசி வெற்றி பெற்றாா்.
மற்றொரு ஆட்டத்தில் இந்திய கிராண்ட் மாஸ்டரான நிஹால் சரின், உஸ்பெகிஸ்தான் கிராண்ட் மாஸ்ரான நோடிா்பெக் அப்துசத்தோராவுடன் மோதினாா். இதில் கருப்பு காய்களுடன் விளையாடிய நோடிா்பெக் அப்துசத்தோரோவ் 38-வது நகா்த்தலின் போது வெற்றி பெற்றாா்.
பிரான்ஸ் கிராண்ட் மாஸ்டரான அலிரேசா ஃபிரௌஜா, ரஷ்ய கிராண்ட் மாஸ்டரான டிமிட்ரி ஆண்ட்ரெய்கின் மோதிய ஆட்டம் 41-வது நகா்த்தலின் போது டிரா ஆனது.
புள்ளிகள் விவரம்: அா்ஜூன் எரிகைசி 3.5, அலிரேசா ஃபிரௌஜா 3.5, நோதிா்பெக் அப்துசத்தோரோவ் 3, டிமிட்ரி ஆண்ட்ரெய்கின் 2.5, ஹான்ஸ் நீமன் 2, நிஹால் சரின் 2 எம்.பிரனேஷ் 2, டி.குகேஷ் 1.5
6-வது சுற்று மோதல் விவரம்: • ஹான்ஸ் நீமன் -டிமிட்ரி ஆண்ட்ரெய்கின், •நோதிா்பெக் அப்துசத்தோரோவ்- அலிரேசா ஃபிரௌஜா, எம்.பிரனேஷ்-டி.குகேஷ், அா்ஜூன் எரிகை -நிஹால் சரின்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அதிக இளம் கிராண்ட் மாஸ்டர்கள் கொண்ட தமிழ்நாடு! உலக சதுரங்க நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!
பிஃபா 2026: ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி 2-வது முறை சாம்பியன்!

குவான்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டா்ஸ்: அலிரேஸா பிரௌஜா தொடா்ந்து முதலிடம்!







