பிஃபா உலகக் கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்த பிரான்ஸ் கேப்டன் எம்பாபே தங்கக் காலணி (கோல்டன் பூட்) விருதை வென்றார்.
உலகின் மிகப்பெரிய கால்பந்துத் திருவிழாவான பிஃபா உலகக் கோப்பையின் இறுதி ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி 2-ஆவது முறையாக உலகக் கோப்பையை வென்றுள்ளது.
சாம்பியன் பட்டம் மட்டுமின்றி, இந்த தொடரில் சிறந்து விளையாடிய வீரர்களுக்கு வழங்கப்படும் 4 முக்கிய விருதுகளில் 3 விருதுகளையும் ஸ்பெயின் அணி வீரர்கள் பெற்றுள்ளனர்.
தங்கக் காலணி (கோல்டன் பூட்)
நடப்பு உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அதிக கோல்கள் அடித்த பிரான்ஸ் அணியின் கேப்டன் எம்பாபேவுக்கு தங்கக் காலணி விருது வழங்கப்பட்டது. இவர் இந்த தொடரில் 10 கோல்கள் அடித்திருந்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டும், 8 கோல்கள் அடித்து தங்கக் காலணி விருதை எம்பாபே வென்றிருந்தார். பிஃபா வரலாற்றில் அதிக முறை தங்கக் காலணி விருதை வென்றவர் என்ற சாதனையையும் எம்பாபே படைத்துள்ளார்.
தங்கப் பந்து (கோல்டன் பால்)
உலகக் கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படும் வீரருக்கு வழங்கப்படும் தங்கப் பந்து விருது, ஆர்ஜென்டீனாவின் மெஸ்ஸிக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்பெயின் அணியின் கேப்டன் ரோட்ரிக்கு வழங்கப்பட்டுள்ளது.
மிட் ஃபீல்டராக விளையாடிய ரோட்ரி, இந்த தொடர் முழுவதும் ஒரேவொரு கோல் மட்டுமே விட்டுக் கொடுத்து, எதிரணியினருக்கு சிம்மசொப்பனமாக விளங்கினார்.
தங்கக் கையுறை (கோல்டன் கிளவ்)
உலகக் கோப்பை தொடரில் குறைவான கோல்களை விட்டுக் கொடுக்கும் அணியின் கோல் கீப்பருக்கு கோல்டன் கிளவ் விருது வழங்கப்படும்.
அந்த வகையில், இந்த தொடர் முழுவதும் 7 ஆட்டங்களிலும் ஸ்பெயின் அணி க்ளீன் ஷீட்டாக விளையாடியது. 5 ஆட்டங்களுக்கு மேல் க்ளீன் ஷீட்டாக விளையாடிய முதல் அணியாக ஸ்பெயின் உள்ளது.
இந்த நிலையில், ஸ்பெயின் அணியின் கோல் கீப்பர் உனாய் சைமனுக்கு வழங்கப்பட்டுள்ளது.
சிறந்த இளம் வீரர் விருது
ஸ்பெயின் அணியின் மிடில் டிஃபென்ஸராக விளையாடிய 19 வயதான பாவ் குபார்சிக்கு, சிறந்த இளம் வீரர் விருது வழங்கப்பட்டுள்ளது.
Summary
FIFA 2026 - Who won the Golden Boot and Golden Ball awards
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










