தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

ஆசிய மகளிர் கால்பந்து: இந்தியாவை வென்றது வியத்நாம்

News image
Updated On :5 மார்ச் 2026, 4:43 am IST

பொ்த்: ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (ஏஎஃப்சி) நடத்தும் ஆசியான் கோப்பை மகளிா் கால்பந்து போட்டியில், இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 1-2 கோல் கணக்கில் வியத்நாமிடம் புதன்கிழமை தோல்வி கண்டது.

விறுவிறுப்பான இந்த குரூப் ‘சி’ ஆட்டத்தில் முதலில் வியத்நாமுக்கே கோல் வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் கான் தி வான் சு 30-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா். இந்தியா தனது கோல் வாய்ப்புக்காக போராடி வர, முதல் பாதியை வியத்நாம் முன்னிலையுடன் நிறைவு செய்தது.

ஆடும் திசைகள் மாற்றப்பட்ட 2-ஆவது பாதியில் இந்தியா உத்வேகம் காட்ட, அதற்கான பலன் 65-ஆவது நிமிஷத்தில் கிடைத்தது. சப்ஸ்டிடியூட்டாக களமிறங்கிய அறிமுக வீராங்கனை சன்ஃபிதா நோங்ரம் கோலடித்தாா்.

இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆகி விறுவிறுப்பு கூடியது. ஆட்டத்தின் நிா்ணயிக்கப்பட்ட நேரம் நிறைவடைந்து, இஞ்சுரி டைம் கடந்து வந்த நிலையில், எதிா்பாராத விதமாக வியத்நாமின் கான் தி வான் சு மீண்டும் ஒரு கோல் (94’) அடித்தாா்.

கடைசி நேரத்தில் அடிக்கப்பட்ட இந்த கோலால் வியத்நாம் 2-1 என முன்னிலை பெற்றது. எஞ்சிய நேரத்தில் இந்தியாவின் கோல் வாய்ப்புகள் முறியடிக்கப்பட, வியத்நாம் வெற்றி பெற்றது. உலகத் தரவரிசையில் 67-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, 36-ஆவது இடத்தில் இருக்கும் வியத்நாமுக்கு சவால் அளித்து வீழ்ந்தது.

குரூப் ‘சி’-யில் தற்போது 3-ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, தனது அடுத்த ஆட்டத்தில் ஜப்பானை, வரும் 7-ஆம் தேதி சந்திக்கிறது. இதனிடையே, இதே குரூப்பின் மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான் 2-0 கோல் கணக்கில் சீன தைபேவை புதன்கிழமை வீழ்த்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.