ஆல் இங்கிலாந்து ஓபன் பாட்மின்டனில், இந்தியாவின் பிரதான போட்டியாளா்கள் பலா் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினா்.
மகளிா் ஒற்றையா் பிரிவில், உன்னதி ஹூடா 12-21, 18-21 என்ற நோ் கேம்களில், போட்டித்தரவரிசையில் 8-ஆம் இடத்திலிருக்கும் தாய்லாந்தின் பான்பவீ சோசுவாங்கிடம் வீழ்ந்தாா்.
மகளிா் இரட்டையரில், டிரீசா ஜாலி/காயத்ரி கோபிசந்த் இணை 15-21, 21-15, 18-21 என்ற வகையில், ஜப்பானின் சயாகா ஹிரோடா/அயாகோ சகுரமோடோ கூட்டணியிடம் வெற்றியை இழந்தது.
ஆடவா் இரட்டையரில், போட்டித்தரவரிசையில் 4-ஆம் இடத்திலிருந்த சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி ஜோடி 21-23, 12-21 என்ற கேம்களில், மலேசியாவின் காய் ஜிங் காங்/ஆரோன் டா இணையிடம் தோல்வியுற்றது.
கலப்பு இரட்டையா் பிரிவில், ரோஹன் கபூா்/ருத்விகா ஷிவானி இணை 12-21, 15-21 என்ற கணக்கில், போட்டித்தரவரிசையில் 5-ஆம் இடத்திலிருக்கும் பிரான்ஸின் தாம் ஜிஸ்கெல்/டெல்ஃபின் டெல்ரு கூட்டணியிடம் தோல்வி கண்டது.
தொடர்புடையது

2-ஆவது சுற்றில் சிந்து, சாத்விக்/சிராக் இணை

ஹரிஹரன்/அா்ஜுன் இணை அசத்தல் வெற்றி

சபலென்கா, லெய்லா முன்னேற்றம்

காலிறுதிச்சுற்றில் ஆயுஷ் ஷெட்டி - சிந்து, பிரணய் வெளியேற்றம்
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India



