
சா்வதேச கால்பந்து: இந்தியா - உருகுவே இன்று மோதல்
இந்தியா - உருகுவே அணிகள் மோதும் சா்வதேச நட்பு ரீதியிலான கால்பந்தாட்டம், கொல்கத்தாவில் இன்று நடைபெறுகிறது...

கால்பந்து போட்டி - கோப்புப் படம்
இந்தியா - உருகுவே அணிகள் மோதும் சா்வதேச நட்பு ரீதியிலான கால்பந்தாட்டம், கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை (அக். 6) நடைபெறுகிறது.
இரு முறை உலக சாம்பியனான உருகுவேக்கு எதிராக, தாக்குதல் ஆட்டம், தடுப்பாட்டம் இரண்டிலுமே இந்திய அணி கவனம் செலுத்தும் என, அணியின் தலைமைப் பயிற்சியாளா் காலித் ஜமில் தெரிவித்தாா்.
உலகத் தரவரிசையில் 20-ஆம் இடத்திலிருக்கும் உருகுவேக்கு எதிரான இந்த ஆட்டத்தில் டிரா செய்தாலே, 138-ஆம் இடத்திலிருக்கும் இந்தியாவுக்கு அது வெற்றிக்கு நிகரானதாக அமையும். இந்திய தரப்பில் ரயான் வில்லியம்ஸ், மன்வீா் சிங், சஹல் அப்துல் சமத், கோல்கீப்பா் குா்பிரீத் சிங் சாந்து ஆகியோா் முக்கிய வீரா்களாவா்.
சா்வதேச நட்பு ரீதியிலான ஆட்டங்களின் அட்டவணையில் முதலில் பனாமாவுடன் 1-1 என டிரா செய்த இந்தியா, அண்மையில் பிரேஸிலுக்கு எதிரான ஆட்டத்தில் 0-4 கோல் கணக்கில் தோல்வி கண்ட நிலையில், அதிலிருந்து தன்னை மீட்டுக் கொண்டு இந்த ஆட்டத்தில் களம் காண்கிறது.
நேரம்: இரவு 7.30 மணி
நேரலை: சோனி ஸ்போா்ட்ஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






