உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

இந்திய கால்பந்து வரலாற்றில் ஒரு திருப்புமுனை... மனம் திறந்த பயிற்சியாளர்!

இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் காலித் ஜமீல் பேட்டி குறித்து...

Coach Khalid Jamil

பயிற்சியாளர் காலித் ஜமீல் - படம்: எக்ஸ் / இந்தியன் ஃபுட்பால்.

Published On :2 செப்டம்பர் 2026, 6:10 pm IST

இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் காலித் ஜமீல் அளித்த பேட்டியில், “ பிரேசில், உருகுவே அணிகளுடன் சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய கால்பந்தின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.

இந்தியா - பிரேசில் கால்பந்துப் போட்டி வரும் அக்டோபர் 3ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெற இருக்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை டிஸ்டிக் பக்கத்தில் தொடங்கியுள்ளது.

மூன்று சர்வதேச போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கிறது. பனாமா போட்டி பெங்களூரிலும் பிரேசில், உருகுவே ஆகிய போட்டிகள் கொல்கத்தாவிலும் நடைபெற இருக்கின்றன.

இந்த நிலையில், இந்திய கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் காலித் ஜமீல் பிடிஐக்கு அளித்த பேட்டியில் பேசியிருப்பதாவது:

நமது கால்பந்து வரலாற்றில் பிரேசில் உடன் முதல்முறையாக விளையாடுகிறோம். இது இந்தியாவின் கால்பந்தில் திருப்புமுனையாக இருக்கிறது. நேர்மறையாக இருக்கிறது. நாம் ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியா முன்னேறிச் செல்ல வேண்டும். தற்போதைக்கு ஆசிய கோப்பைக்குத் தேர்வாக வேண்டும். அதற்கு முன்னதாக, வலுவான அணிகளுடன் விளையாடவிருக்கிறோம். இந்திய கால்பந்திற்கு இது மிகவும் நல்லது.

இது இந்தியாவின் வரலாறு. யாரும் தவறாகப் பேசக்கூடாது. ரசிகர்களிடம் இருந்து ஆதரவு வேண்டும். ரசிகர்களிடம் இருந்து 100 சதவிகித ஆதரவு கிடைத்தால், வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள்.

பிரேசில், உருகுவே உடன் விளையாட இந்திய வீரர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள். அவர்கள் நல்ல அணிகள். அதனால், நாம் கவனமுடன் இருக்க வேண்டும். வீரர்களுக்கு உடல்நலன் முக்கியம். கொல்கத்தாவில் நல்ல ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுகிறோம். ஆதரவு கிடைக்குமென நம்புகிறேன். ஒவ்வொரு வீரரும் உடல்நலத்துடன் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். அனைவருமே தங்களது செயல்பாடுகளால் மட்டுமே தேர்வாகியுள்ளார்கள்.

குறைவான தவரிசையில் இருக்கும் அணிகளை விட உயர்வான தவரிசையில் இருக்கும் அணிகளுடன் மோத விரும்புகிறோம். அப்போதுதான் வீரர்கள் புதியதாகக் கற்றுக்கொள்வார்கள். பிரேசில், உருகுவே, பனாமா உடன் விளையாடுகிறோம். இது நல்ல முன்னெடுப்பு என்றார்

Summary

Playing Brazil, Uruguay will be turning point for Indian football, says coach Jamil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.