
ஆர்செனல் பயிற்சியாளருக்கு 2030 வரை ஒப்பந்தம் நீட்டிப்பு..! பிரீமியர் லீக்கில் புதிய வரலாறு!
பிரிமீயர் லீக்கில் ஆர்செனல் அணியின் பயிற்சியாளருக்கு ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது குறித்து...

ஆர்செனல் அணியின் பயிற்சியாளர் மைக்கேல் ஆர்டெட்டா - படம்: எக்ஸ் / ஆர்செனல்
இங்கிலாந்தில் நடைபெறும் பிரிமீயர் லீக்கில் ஆர்செனல் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக மைக்கேல் ஆர்டெட்டாவுக்கு 20230 வரை ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த சீசனில் ஆர்செனல் அணி பிரீமியர் லீக்கை வென்று அசத்தியது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தக் கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது. கடைசியாக 2003-04 சீசனில் வென்றிருந்தது.
ஸ்பெயினைச் சேர்ந்த மைக்கேல் ஆர்டெட்டா (44 வயது) ஆர்செனல் அணிக்கு கடந்த டிசம்பர் 2019ல் பயிற்சியாளராக இணைந்தார். தற்போது, 2030 வரைக்கும் அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பிரீமியர் லீக் வரலாற்றிலேயே நீண்ட காலம் பயிற்சியாளராக இருக்கும் நபராக மைக்கேல் ஆர்டெட்டா சாதனை படைத்துள்ளார்.
இது குறித்து மைக்கேல் ஆர்டெட்டா, “நாங்கள் ஏற்கெனவே சிறப்பான ஒரு பிணைப்பை உருவாக்கியிருக்கிறோம். அந்த நினைவுகளே வாழ்நாள் முழுவதும் நிலைத்திருக்கும்.
நாங்கள் இணைந்து சாதிப்பதில் இது தொடக்கம் என்பதை நினைத்து ஆவலுடன் இருக்கிறோம்” எனக் கூறியுள்ளார். இந்தப் போட்டிகளை ஜியோ ஹாட்ஸ்டாரில் பார்வையிடலாம்.
வீரர்கள் ரசிகர்கள் இவர் குறித்து பேசிய காணொளியை ஆர்செனல் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. ஆர்செனல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
Forward together.
— Arsenal (@Arsenal) October 7, 2026
Mikel Arteta is here to stay â¤ï¸ pic.twitter.com/c02vnZsUVR
Summary
Arteta signs new contract at Arsenal to 2030 after leading club to Premier League title
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







