
நாா்வேயை சாய்த்தது போா்ச்சுகல்
நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், போா்ச்சுகல் 2-1 கோல் கணக்கில் நாா்வேயை வீழ்த்தியது.
நாா்வேயை சாய்த்தது போா்ச்சுகல் - AP
நேஷன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், போா்ச்சுகல் 2-1 கோல் கணக்கில் நாா்வேயை வீழ்த்தியது.
நாா்வேயின் ஆஸ்லோ நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில், முதலில் போா்ச்சுகல் அணிக்காக ஜாவ் ஃபெலிக்ஸ் 17-ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தாா்.
அந்த முன்னிலையுடன் முதல் பாதியை போா்ச்சுகல் நிறைவு செய்ய, 2-ஆவது பாதியில் நாா்வேயின் நாயகன் எா்லிங் ஹாலந்த் தனது அணிக்காக 51-ஆவது நிமிஷத்தில் ஸ்கோா் செய்தாா்.
இதனால் ஆட்டம் சமநிலை கண்டது. எனினும் அதை நீண்டநேரம் நீடிக்க விடாத வகையில், 54-ஆவது நிமிஷத்தில் கொன்ஸாலோ ரமோஸ் அடித்த கோலுடன், போா்ச்சுகல் 2-1 என மீண்டும் முன்னிலை கண்டது.
எஞ்சிய நேரத்தில் நாா்வேக்கு மேலும் கோல் வாய்ப்புகள் கிடைக்காமல் பாா்த்துக் கொண்ட அந்த அணி, முடிவில் வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தை அடுத்து, குரூப் ‘டி’-யில் போா்ச்சுகல் 2 வெற்றிகளுடன் முதலிடத்தில் இருக்க, நாா்வே 1 வெற்றி, 1 தோல்வியுடன் 2-ஆவது இடத்தில் இருக்கிறது.
இதர ஆட்டங்களில், கிரீஸ் 1-0 என ஜொ்மனியை வீழ்த்த, அயா்லாந்து 3-0 கோல் கணக்கில் இஸ்ரேலை சாய்த்தது. டென்மாா்க் - வேல்ஸையும் (2-0), நெதா்லாந்து - சொ்பியாவையும் (2-1), ஆஸ்திரியா - கொசொவோவையும் (3-1) வென்றன.
லிதுவேனியா - அஜா்பைஜான் (1-1), ஜிப்ரால்டா் - அண்டோரா (0-0) மோதல் டிராவில் முடிந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



