சிலை கடத்தல் மன்னன் தீனதயாளன் ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழமையான கோவிலில் 13 சிலைக்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிலைக்.....


ஸ்ரீவில்லிபுத்தூர்: திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பழமையான கோவிலில் 13 சிலைக்கள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சிலைக் திருட்டு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை தீனதயாளன் உள்ளிட்ட இருவர் பலத்த போலீஸார் பாதுகாப்புடன் ஆஜர் படுத்தப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம், பழவூரில் மிகப்பழமை வாய்ந்த நாறும் பூநாதர் கோவில் உள்ளது. இக் கோவிலின் இரும்பு கதவுகளை உடைத்து 18.6.2005-ம் தேதி ஒரு கும்பல் உள்ளே புகுந்துள்ளது. அங்கிருந்த நடராஜர், சிவகாமி, காரைக்கால் அம்மையார், மாணிக்கவாசகர், நாறும் பூநாதர், பிரியாவிடையம்மன், வள்ளி, விநாயகர், கிருஷ்ணன், அத்திரதேவர், சுப்பிரமணியர், பாலவிநாயகர், கோமதி ஆகிய 13 சிலைகளை இக் கும்பல் கொள்ளையடித்துச் சென்றது.
இது தொடர்பாக பழவூர் போலீஸார் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சக்திமோகன், பாலாஜி (எ) பாலசந்தர் (23), சின்ன காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமார் (எ) ஆறுமுகம் (43) ஆகியோர் சிலைகளைக் கொள்ளையடித்ததாயும், மதுரையைச் சேர்ந்த முருகன் (எ) சௌதி முருகன், ஷாஜகான் (42), அருணாச்சலம் (46), காரைக்குடியைச் சேர்ந்த தினகரன் (60) ஆகியோர் சிலைகளை சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த கோவிந்தராஜன் மகன் தீனதயாளன் (75) என்பவரிடம் ரூ.9 லட்சத்திற்கு விற்றதாயும் வழக்குப் பதிவு செய்தனர்.
வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் மற்றும் சிலை திருட்டு தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. வழக்கின் முதல் விசாரணை புதன்கிழமை நடைபெற்றது. வழக்கு விசாரணைக்கு சிலை திருட்டு தடுப்பு ஐ.ஜி. மாணிக்கவேல் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீனதயாளன் மற்றும் தினகரன் அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி வசந்தி, வழக்கு விசாரணையை இம் மாதம் 27-ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதனையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தீனதயாளன் அழைத்துச் செல்லப்பட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...