கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

விருதுநகரில் மனைவியைக் கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

விருதுநகரில் மனைவியை அடித்துக் கொலை செய்த வழக்கில் அவரது கணவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றம்....

News image
Updated On :24 ஜூன் 2016, 10:42 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகரில் மனைவியை அடித்துக் கொலை செய்த வழக்கில் அவரது கணவருக்கு ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பு வழங்கியது.

விருதுநகர், சின்னபேராலியைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் ரமேஷ் (30). இவருக்கும் திருச்செந்தூர், புளியங்குளம் கருப்பன்ணன் என்பவரின் மகள் கச்சம்மாள் (24) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு சுவேதா (7), ஹரிஸ்குமார் (4) என்ற இரு பிள்ளைகள் உண்டு. ரமேஷ் வெளியூர்களில் தங்கி கொத்தனார் வேலை செய்து வந்தார். கச்சம்மாள் தையல் தொழில் செய்து வந்தார்.

ஊர் வரும் போதெல்லாம் குடும்ப செலவிற்கு பணம் தராமல் மனைவியிடம் ரமேஷ் தகராறு செய்து வந்துள்ளார். இது குறித்து கச்சம்மாள் தனது தந்தையிடம் கூறியுள்ளார். அவர் கண்டித்துள்ளார், மேலும் ஊர் பஞ்சாயத்து கூடி ரமேஷைக் கண்டித்துள்ளது.இந்நிலையில் நாகப்பட்டிணம், உத்திரன்குடி என்ற இடத்தில் கொத்தனார் வேலைக்குச் சென்றபோது, அங்கு நீலாவதி என்ற கல்லூரி மாணவியுடன் ரமேஷ்க்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

திருமணம் ஆகாதவர் போல நடித்து நீலாவதியிடம் ரமேஷ் பழகிவந்துள்ளார்.14.1.2014-ம் தேதி ஊருக்கு வந்த ரமேஷ், மது குடித்துவிட்டு மனைவியுடன் வழக்கம்போல் தகராறு செய்துள்ளார்.17.1.14-ம் தேதி ரமேஷின் செல்லிடைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் நீலாவதி பேசியுள்ளார். உனக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பதாய் கேள்விப்பட்டேன். நான் படிக்கப் போகிறேன். நீ உனது குடும்பத்துடன் இருந்து வேலை செய் என்று கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டாராம்.

18.1.14-ம் தேதி குடும்பத்தினருடன் ரமேஷ் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது மனைவி செலவிற்கு பணம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அங்கிருந்த மரப்பலகையை எடுத்து மனைவியை அடித்து கொலை செய்துள்ளார்.இது குறித்து கச்சம்மாளின் தங்கை ராக்கு, விருதுநகர் ஊரக காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து ரமேஷைக் கைது செய்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் விரைவு அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அரசு தரப்பில் வழக்குரைஞர் மு.மலர்விழி ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி என்.ராஜலட்சுமி, ரமேஷ்க்கு ஆயுள் தண்டனையும், ரூ.60 ஆயிரம் அபராதமும் விதித்துத் தீர்ப்பு வழங்கினார். அபராதத் தொகையை ரமேஷ் செலுத்திய பிறகு இத்தொகையை அவரது இரு பிள்ளைகளின் பெயரில் டெபாசிட் செய்யவும் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.