கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசுப் பள்ளி ஆசிரியரைத் தாக்கி 4 பவுன் பறிப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பள்ளியைத் தாக்கி அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

News image
Updated On :27 ஜூன் 2016, 7:00 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் திங்கள்கிழமை பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த அரசுப் பள்ளியைத் தாக்கி அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை பறித்துச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.

ராஜபாளையம், ஆண்டாள் நகரில் குடியிருந்து வருபவர் ராணுவத்தில் ஹவில்தாராக இருந்து ஓய்வு பெற்றவர் ரவிச்சந்திரன். இவர் தற்போது கல்லமநாயக்கன்பட்டியில் தீப்பெட்டி ஆலை வைத்துள்ளார். இவரது மனைவி வனிதா (40). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியம் மாயத்தேவன்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இடைநிலை ஆசிரியையைக பணிபுரிந்து வருகிறார்.

இவர்களுக்கு ஒரு மகள் உண்டு.வனிதா, தனது இரு சக்கர வாகனத்தை அட்டைமில் பேருந்து நிறுத்தத்தில் வைத்திருப்பார். ராஜபாளையத்திலிருந்து அங்கு வந்து இறங்கி, இரு சக்கர வாகனத்தில் பள்ளிக்கு வழக்கமாகச் செல்வார். திங்கள்கிழமை பள்ளிக்கு காலையில் தனது இரு சக்கர வாகனத்தில் அச்சம்தவிழ்த்தான் சாலையில் சென்று கொண்டிருந்தார். நரியன்குளம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் இரு சக்கர வாகனத்தில் இருவர் வந்து, வனிதா ஓட்டிச் சென்ற வண்டியை மிதித்துள்ளார்கள். இதில் நிலைதடுமாறி வனிதா கீழே விழுந்துள்ளார்.

அப்போது அவர் அணிந்திருந்த 4 பவுன் செயினை இருவரும் பறித்துக் கொண்டு வண்டியில் தப்பி ஓடியுள்ளார்கள். சற்று நேரத்தில் திரும்ப வந்த அவர்கள், விழுந்து கிடந்த வனிதாவின் பையையையும் பறித்துக் கொண்டு தப்பிவிட்டார்கள். அதில் இவரது செல்லிடைபேசி மற்றும் பணம் ரூ.2200 இருந்துள்ளது.

வழிப்பறியில் ஈடுபட்டவர்களுக்கு சுமார் 25 வயதிற்குள் இருக்கும் என்றும், ஒருவர் கைலியும் சட்டையும் ஒருவர் வெள்ளை வேஷ்டியும் சட்டையும் அணிந்திருந்ததாயும் ஆசிரியை கூறினார்.காயமுற்ற வனிதாவை சக ஆசிரியர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இச் சம்பவம் தொடர்பாக வன்னியம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

தொடரும் சம்பவங்கள்:

வன்னியம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள் இதே சாலையில் பல வழிப்பறிச் சம்பவங்கள் நடைபெற்றும் வழக்கு விசாரணையில் இதுவரை எதில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் பறிபோன நகைகளை மீட்கப்படாமல் உள்ளது இப் பகுதி மக்களிடம், குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் சென்று வரும் பெண்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.