கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அமைச்சராக பதவியேற்ற கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு சொந்த ஊரில் அமோக வரவேற்பு

அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் சொந்த மாவட்டத்திற்கு சனிக்கிழமை வந்த கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு சனிக்கிழமை மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :28 மே 2016, 10:00 am

கோ.ஜெயக்குமார்

ஸ்ரீவில்லிபுத்தூர்: அமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர் சொந்த மாவட்டத்திற்கு சனிக்கிழமை வந்த கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு சனிக்கிழமை மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, சட்டப் பேரவைத் தேர்தலில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக மாவட்டத்திற்கு வருகை புரிந்தார்.

மதுரை-விருதுநகர் மாவட்ட எல்லையான ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி அழகாபுரியில் அவரை ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் மு.சந்திரபிரபா, நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி, கட்சியின் நகரச் செயலாளர் வி.டி.முத்துராஜ், மாவட்டக் கவுன்சிலர் த.முத்தையா ஆகியோர் வரவேற்றனர்.

மேலும் அங்கு மாவட்ட அரசுப் பணியாளர்கள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அ.காமராஜ் அமைச்சரை சந்தன மாலை அணிவித்து வரவேற்றார். அங்கிருந்து வழிவிடு முருகன் கோவிலில் சென்று அமைச்சர் அங்கு சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் ஸ்ரீவில்லிபுத்தூர் செல்லும் வழியில் கிருஷ்ணன்கோவில், ராமாகிருஷ்ணாபுரம் ஆகிய இடங்களில் திரண்டிருந்த தொண்டர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலுக்கு வருகை புரிந்த  அமைச்சரை, கோவில் தக்கார் கி.ரவிச்சந்திரன், ஸ்தானிகம் ரமேஷ் (எ) ரெங்கராஜன் ஆகியோர் வரவேற்றனர். அங்கு அவருக்கு கோவில் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் அமைச்சர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, தனது சொந்த தொகுதியான சிவகாசிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

நிகழ்ச்சியில் கட்சியின் மாவட்டப் பொருளாளர் மல்லி எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், ஒன்றியச் செயலாளர் எஸ்.கே.மயில்சாமி, தொகுதிச் செயலாளர் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், நகர்மன்ற உறுப்பினர் மீராதனலட்சுமி முருகன், வத்திராயிருப்பு ஒன்றியச் செயலாளர் சுப்புராஜ், ஒன்றியக் குழுத் தலைவர்கள் கி.காளிமுத்து (ஸ்ரீவில்லிபுத்தூர்), கனகு அம்மாள் (வத்திராயிருப்பு) உள்ளிட்ட ஏராளமான கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.