கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மூன்று தொகுதி இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்தனர்!

விரைவில் இடைதேர்தல் நடைபெறவுள்ள தமிழகத்தின் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய நான்கு தொகுதிகளிலும்... 

News image
Updated On :28 அக்டோபர் 2016, 11:03 am

DIN

சென்னை: விரைவில் இடைதேர்தல் நடைபெறவுள்ள தமிழகத்தின் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய நான்கு தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

எதிர்வரும் நவம்பர் 19-ம் தேதி அன்று தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரியின் நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த நிலையில் தஞ்சாவூரில் எம்.ரங்கசாமி, அரவக்குறிச்சியில் வி.செந்தில் பாலாஜி, திருப்பறங்குன்றத்தில் ஏ.கே.போஸ், நெல்லித்தோப்பில் ஓம்.சக்தி சேகர் உள்ளிட்ட அதிமுக வேட்பாளர்கள்  இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர்.

உடல்நிலைகாரணமாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ள நிலையில், அதிமுகவினருக்கு இந்த 3 தொகுதிகளின் தேர்தல் முக்கியமானதாக கருதப்படுகிறது.

முகவினரும்  அதிமுகவுக்கு கடும் நெருக்கடி கொடுக்கும் முடிவில் இருப்பதால் தேர்தல் களம் சூடுபிடிக்கும் என்று கருதப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.