கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

மூன்று தொகுதி இடைத்தேர்தலை புதிய தமிழகம் புறக்கணிக்கிறது: கிருஷ்ணசாமி அறிவிப்பு

தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை  புதிய தமிழகம் கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சித்  தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

News image
Updated On :31 அக்டோபர் 2016, 3:29 pm

DIN

சென்னை: தமிழகத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலை  புதிய தமிழகம் கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சித்  தலைவர் கிருஷ்ணசாமி அறிவித்துள்ளார்.

மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அதிக அளவு பணப்பட்டுவாடா உள்ளிட்ட புகார்களின் காரணமாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. தேர்தலுக்குப் பிறகு திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்எல்ஏ சீனிவேல் மரணமடைந்ததை அடுத்து, மொத்தமாக 3 தொகுதிகளும் காலியாகின . இந்த தொகுதிகளுக்கு வரும் நவம்பர் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளதாக்க தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்பொழுது அவர் கூறியதாவது:

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய 3 தொகுதிகளின் இடைத்தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். மேலும் இந்த 3 தொகுதிகளிலும் யாருக்கும் ஆதரவு இல்லை.

இவ்வாறு கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.