கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் பெரிய சூரிய மின் சக்தி நிலையம்: தேசத்திற்கு அர்ப்பணிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள, அதானி குழுமத்திற்கு சொந்தமான 648  மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி நிலையம் இன்று தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

News image
Updated On :21 செப்டம்பர் 2016, 9:36 am

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள, அதானி குழுமத்திற்கு சொந்தமான 648  மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி நிலையம் இன்று தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி தெரிவித்திருப்பதாவது:

ஒரே இடத்தில் அமைந்துள்ள  648  மெகா வாட் திறன் கொண்ட உலகின் மிகப் பெரிய சூரிய மின் சக்தி நிலையம் இன்று தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.

இது தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் ஒரு மகத்தான தருணமாகும். இதை நாட்டிற்கு சமர்ப்பிப்பதில் நாங்கள்     மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நிலையம் உலகில் பசுமை எரிசக்தி தயாரிப்பாளர்களில் ஒருவராக  இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் எண்ணம் நிறைவேற உதவும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.