தமிழகத்தில் அமைந்துள்ள உலகின் பெரிய சூரிய மின் சக்தி நிலையம்: தேசத்திற்கு அர்ப்பணிப்பு!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள, அதானி குழுமத்திற்கு சொந்தமான 648 மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி நிலையம் இன்று தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.


ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் அமைந்துள்ள, அதானி குழுமத்திற்கு சொந்தமான 648 மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி நிலையம் இன்று தேசத்திற்கு அர்ப்பணிக்கப்பட்டது.
இது தொடர்பாக அந்நிறுவனம் சார்பில் இன்று ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் குழுமத்தின் தலைவரான கவுதம் அதானி தெரிவித்திருப்பதாவது:
ஒரே இடத்தில் அமைந்துள்ள 648 மெகா வாட் திறன் கொண்ட உலகின் மிகப் பெரிய சூரிய மின் சக்தி நிலையம் இன்று தேசத்திற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
இது தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் ஒரு மகத்தான தருணமாகும். இதை நாட்டிற்கு சமர்ப்பிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நிலையம் உலகில் பசுமை எரிசக்தி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருக்க வேண்டும் என்ற இந்தியாவின் எண்ணம் நிறைவேற உதவும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...