கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்!

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெறுகிறது;

News image
Updated On :25 செப்டம்பர் 2016, 6:09 am

DIN

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் இன்று வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாம் நடைபெறுகிறது

இது தொடர்பாக மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 16 தொகு திகளில், 2017-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கடந்த 1-ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் நகல்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளில், பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன. அதை பொதுமக்கள் பார்வையிட்டு, தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமல் உள்ளவர்கள் மற்றும் வரும் ஜனவரி 1-ம் தேதி 18 வயது நிறைவடைய இருப்பவர்கள், வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர், உரிய படிவங்களைப் பெற்று, அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலர் அலுவலகத்தில் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

பொதுமக்கள் வசதிக்காக, சென்னை மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 9.30 முதல் மாலை 5.30 வரை சிறப்பு முகாம் நடைபெறுகிறது. அதில் பொதுமக்கள், வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்ப்பது, திருத்தங்கள் மேற் கொள்வது போன்றவற்றை செய்யலாம். மேலும் www.elections.tn.nic.in என்ற இணையதளத்திலும் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.