கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

தமிழகத்தில் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் உறுதி: துரைமுருகன்

தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று திமுக முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன்

News image
Updated On :24 மார்ச் 2017, 11:11 am

தினமணி

சென்னை: தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்று திமுக முதன்மை செயலாளரும் முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் கூறினார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதி திமுக தேர்தல் அலுவலகத்தில் அனைத்துக் கட்சி செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.

இதில் துரைமுருகன் கலந்துகொண்டு பேசியதாவது:

ஆர்.கே.நகர் தொகுதியில் இதற்கு முன்பு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றிருந்தார். அவர் இறந்ததால் இடைத்தேர்தல் வந்துள்ளது.

ஜெயலலிதா இதற்கு முன்பு பர்கூரிலும், ஸ்ரீரங்கத்திலும் போட்டியிட்டார். அவர் முதல்வரான பிறகும் அந்த தொகுதிகள் முன்னேற்றம் அடையவில்லை.

ஜெயலலிதா இறந்த 3 மாதத்தில் அதிமுக 3 ஆக உடைந்து விட்டது. மேலும் கட்சியின் பெயர், கொடி, சின்னம் முடக்கப்பட்டுள்ளது. அதிமுக கட்சி பெயரையும் தேர்தல் ஆணையம் முடக்கி விட்டது.

இந்நிலையில், அதிமுகவின் 3 பிரிவினரும் ஆர்.கே.நகரில் போட்டியிடுகிறார்கள். கட்சியின் பெயரைக்கூட காப்பாற்ற முடியாத இவர்களால் மக்களுக்காக என்ன நன்மை ஏற்பட்டுவிடபோகிறது. ஒருவர் மீது ஒருவர் வீண் பழிதான் சுமத்துகின்றனர். மக்களை பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை.

தமிழகத்தில் இன்னும் 6 மாதத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆவது உறுதி. அதற்கு அச்சாரம்தான் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் என்று கூறினார்.

ஓபிஎஸ் அணி அதிமுக (புரட்சித் தலைவி அம்மா) என்றும் சசிகலா அணிக்கு அதிமுக (அம்மா) என்றும் பெயர்கள் வழங்கப்பட்டன. ஓபிஎஸ் அணிக்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னத்திலும். சசிகலா தரப்புக்கு தொப்பி சின்னத்திலும் போட்டியிடுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.