சென்னை: தமிழகத்தில் சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
தஞ்சாவூரில் இருந்து களவு போய் 30 ஆண்டுகளுக்கும் மேலான ராஜராஜ சோழன் - வனமாதேவியின் ஐம்பொன் சிலைகளை குஜராத்தில் இருந்து மீட்டுக் கொண்டு வந்த ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு சரியாக செயல்படவில்லை என்றும் அவரது விசாரணையில் நம்பிக்கையில்லை என்றும் தமிழக அரசு நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்தது.
பொன். மாணிக்கவேல் தலைமையிலான விசாரணையில் திருப்தியில்லாததால், அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற கொள்கை முடிவு எடுத்திருப்பதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்திருந்த நிலையில், இன்று அரசாணைப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில், சிலைக் கடத்தல் தொடர்பாக தமிழக எல்லைக்குள் விசாரணை நடத்த சிபிஐக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
பொன். மாணிக்கவேல் இதுவரை நடத்திய விசாரணையின் அறிக்கையைக் கூட தமிழக அரசிடம் தாக்கல் செய்யவில்லை என்றும், எங்கு விசாரணை நடத்த உள்ளார்கள், சோதனை நடத்த உள்ளார்கள் என்பது குறித்து காவல்துறையிடம் தெரிவிப்பது இல்லை என்றும் அரசு சார்பில் முன்னதாகக் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், வழக்கு விசாரணைகளை சிபிஐக்கு மாற்றி தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும், ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவையும் கலைத்து விட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







