சென்னை அடையாறில் போலீஸ் வாகனச் சோதனையின் போது ஆற்றில் குதித்தவர் 2 நாட்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சென்னை அடையாறு அருணாச்சலபுரம் ராமசாமி தோட்டத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (22). இவர் சனிக்கிழமை இரவு, தனது நண்பரின் மோட்டார் சைக்கிளை வாங்கிக் கொண்டு அபிராமபுரம் ராஜா முத்தையாபுரத்தில் வசிக்கும் மற்றொரு நண்பரைஅவரது வீட்டில் விடுவதற்காக சென்றார்.
அப்போது, அடையாறு திருவிக பாலத்தில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்த அடையாறு போக்குவரத்து போலீஸார், அந்த வழியாக வந்த ராதாகிருஷ்ணனின் மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை செய்தனர். அவர் மதுபோதையில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிந்து ராதாகிருஷ்ணன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
மோட்டார் சைக்கிளை தரும்படி, ராதாகிருஷ்ணன் தகராறு செய்யத் தொடங்கினார். மோட்டார் சைக்கிளை தராவிட்டால், ஆற்றில் குதித்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. அவரை போலீஸார் சமரசம் செய்ய முயற்சித்தபோது திடீரென ஆற்றில் குதித்தார்.
இதுகுறித்து தகவல்அறிந்ததும் திருவான்மியூர், மயிலாப்பூர் பகுதிகளில் இருந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் ஆற்றில் இறங்கி, ராதாகிருஷ்ணனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
2 நாட்கள் தேடியும் சடலம் கிடைக்காததால் இளைஞர் தப்பிச் சென்றிருக்கலாம் என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அடையாறு ஆற்றில் குதித்த ராதாகிருஷ்ணன் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீட் போராட்டத்தில் காவல் துறையின் வரம்பு மீறல் குறித்து விசாரணை: உச்சநீதிமன்றம் பரிந்துரை

பிரதமா் மோடியின் ஃபேஸ்புக் பதிவு நீக்கம்: மன்னிப்புக் கேட்டது மெட்டா

மண்ணூா் காலனி அருகே தனியாா் தொழிற்சாலை கழிவுநீா் தேக்கத்தால் பொதுமக்கள் அவதி
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: வெண்கலம் வென்றது சோனம், ஹிமான்ஷு இணை
விடியோக்கள்

சீமானின் கனவு பலிக்குமா ? | Seeman | NTK | TVK | CM Vijay | DMK | ADMK | Naam tamilar katchi



